“கெட்ட சுந்தர் பேச்சினால் கெட்டேன்; தாயும் தந்தையும் பட்ட பாடு யாவுமே பயனில் லாமல் போயின.” என்று சோமு எண்ணினன்; எண்ணி ஏக்கம் கொண்டனன்; கண்ணீர் சொரிய லாயினன்; கால்கள் சோரத் திரும்பினன்.