இல்லையே!
கொம்புள்ள மிருகங்காள்!
கூடி ஓடி வாருங்கள்.
கொம்பு எனக்கு இல்லையே,
குத்திக் கீழே தள்ளவே!
வாலுள்ள மிருகங்காள்.
வந்தே என்னைப் பாருங்கள்,
வால் எனக்கு இல்லையே,
வளைத்து நீட்டி ஆட்டவே!
இறகுடைய பறவைகாள்!
இங்கே என்னைப் பாருங்கள்.
இறகு எனக்கு இல்லையே,
இஷ்டம் போலக் பறக்கவே!
மூக்குள்ள பறவைகாள்!
முன்னே வந்து பாருங்கள்
மூக்கு எனக்கு நீளமாய்,
முகத்தில் இல்லை கொத்தவே!
|