நேரு தந்த யானை
டில்லிக்குப் போனேன்,
நேருவைப் பார்த்தேன்.
"சல்யூட்" செய்தேன்.
சாக்லேட் தந்தார்.
"என்னடா கண்ணு
ஏதடா வேணும்?
சொன்னால் தருவேன்.
சொல்வாய்" என்றார்.
"அன்புள்ள மாமா,
அவசியம் வேணும்,
சின்னதாய் யானை
சீக்கிரம் தருவீர்"
என்றேன். காகிதம்
எடுத்தார் உடனே.
என்னவோ அதிலே
எழுதிக் கொடுத்தார்.
|