வினோத விடைகள்
மிருக ராஜன் தலையில் ரோமம்
அடர்ந்தி ருப்பதேன்? - காட்டில்
வெட்டி விடவே எந்த ஆளும்
இல்லை யாதலால்!
ஒட்டைச் சிவிங்கிக் கழுத்து மிகவும்
நெட்டை யானதேன்? - அது
எட்டி எட்டி இலையும் தழையும்
பறித்துத் தின்றதால்!
வரிக் குதிரையின் உடம்பு முழுதும்
கோடி ருப்பதேன்? யாரோ
வலிக்க வலிக்கச் சவுக்கி னாலே
அடித்த காயம்தான்!
அண்டங் காக்கை அதிக மாகக்
கறுத்துப் போனதேன்? - அது
அடுப்புக் கரியைத் திருட்டுத் தனமாய்
எடுத்துத் தின்றதால்!
|