பக்கம் எண் :

198மலரும் உள்ளம்

கிளியின் மூக்கு குங்கு மம்போல் 
   சிவந்தி ருப்பதேன்? - யாரோ
கெட்ட பையன் கையைக் கொத்தி
   ரத்தம் பட்டதால்!

ஆந்தை பக்காத் திருடன் போலே 
   விழித்துப் பார்ப்பதேன்? - அதே
அரச பார்வை என்று நினைத்துக் 
   கொண்ட தாலேதான்!