பக்கம் எண் :

202மலரும் உள்ளம்

சக்கரம் இல்லா வண்டியிலே...!

சக்கரம் இல்லா வண்டியிலே
தலையில்லாத ஒருமனிதன்,

காலில் லாத மாடுகளைக்
கட்டி விட்டான் ஹைஹைஹை!

கொம்பை வெட்டி அதனாலே
குடலை வெளியில் எடுத்திடவே,

சந்தோ ஷத்துடன் மாடுகளும்
தாவித் சென்றன ஜாம்ஜாம்ஜாம்!

கடலைக் கடந்து வண்டியுடன்
கால்மணி நேரம் ஆவதற்குள்,

அக்கரை சேர்ந்தான். இக்கதையை
அவசியம் நம்புவீர், தோழர்களே!