பாடிப்பார்!
தா தா தா தா தா தா தா தா தா தாக்குத்
தண்ணீர் தாரான்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆக்கும்
உதவான்; கொள்ளை
லா லா லா லா லா லா லா லா லா லாக்குப்
பொருளை விற்பான்
பா பா பா பா பா பா பா பா பா பாக்கே
ஆளாவானே!
மேலே இருப்பது ஒரு பாட்டு. ஆம், உண்மையிலே இது ஒரு பாட்டுத்தான்! "என்ன, பாட்டா? அப்படியானால், உங்கள் வாயில் ஏதேனும் கோளாறோ?" என்றுதானே கேலி செய்கிறீர்கள்? உங்களுக்குப் பாடத் தெரியாவிட்டால் கேலி எதற்கு?
சரி, ஒன்று, இரண்டு என்று எண்ணவாவது உங்களுக்குத் தெரியுமா? அப்படியானால், மேலே சேர்ந்தாற்போல் எத்தனை தடவை "தா" என்ற எழுத்து வந்திருக்கிறது?
பத்து தடவைகள்.
"தா" வில் பத்து இருப்பதால், அதை தாபத்து என்று படிக்க வேண்டியதுதானே! அதேபோல "ஆ" வில் பத்து; "லா" வில் பத்து"
"பா" வில் பத்து; சேர்த்துப் படித்தால்.
|