பக்கம் எண் :

மலரும் உள்ளம்27

நானே ராஜா

ஆயிரம் தங்கக் காசிருந்தால் 
   ஆனை ஒன்று வாங்கிடுவேன்.
ஆனை ஒன்று வாங்கிடுவேன்.
   அதன்மேல் ஏறி அமர்ந்திடுவேன்.

தெருவில் எங்கும் கற்றிடுவேன்.
   சிறுவர் தொடரச் சென்றிடுவேன்.
அருமை நண்பன் முத்துவையும் 
   அருகில் ஏற்றிக் கொண்டிடுவேன்.

"நானே ராஜா" என்றிடுவேன்.
   நண்பன் முத்து மந்திரியாம்.
ஆனை வாங்கப் பணம்தேவை.
   ஆசை உண்டு; காசில்லையே!