நீயும் நானும் கேட்கலாம்
அறையி னுள்ளே இருந்தபடி
ஆசை யோடு கேட்கலாம்.
ஆளை நேரில் பார்த்திடாமல்
அவரின் குரலைக் கேட்கலாம்.
பாக வதர்கள் பாடுகின்ற
பாட்டைக் கேட்டு சுவைக்கலாம்.
பக்க வாத்தி யங்களெல்லாம்
மிக்க நன்றாய்க் கேட்கலாம்.
சிறுவர் நடத்தும் நிகழ்ச்சியாவும்
சேர்ந்து கேட்டு மகிழலாம்.
பெரிய மனிதர் பேசுகின்ற
பேச்சைக் கூடக் கேட்கலாம்.
இந்தி யாவில் மட்டுமின்றி
இந்தப் பெரிய உலகிலே,
|