வெள்ளை முயல்
துள்ளித் துள்ளி ஓடுதுபார்
வெள்ளை முயல் அம்மா - அதை
மெள்ள ஓடிப் பிடித்திடவே
மிகவும் ஆசை அம்மா.
பஞ்சு போன்ற உடலைத் தடவிப்
பார்க்க ஆசை அம்மா - நான்
கொஞ்சிப் பேசிக் கூடி ஆடிக்
குதிக்க வேண்டும் அம்மா.
பளிங்குக் கண்ணைக் கூர்ந்து நானும்
பார்க்க ஆசை அம்மா - அது
ஒளிந்து கொள்ளப் புதரை நோக்கி
ஓடப் பார்க்கு தம்மா.
புல்லைத் தினமும் பிடுங்கிப் பிடுங்கிப்
போடு வேனே அம்மா - அது
மெல்ல மெல்லக் கடித்துக் கடித்து
உள்ளே தள்ளும் அம்மா
|