பக்கம் எண் :

மலரும் உள்ளம்55

அதிசய ஆலமரம்

அதிசயம்! அதிசயம்!
அடையாற்றில் அதிசயம்! - அது
ஆலமரம் வளர்ந்திருக்கும்
அற்புதமாம் ரகசியம்!

அகலத்தையும் நீளத்தையும்
அளந்து பார்த்தேன் - அம்மாடியோ!
அவ்வளவு பெரியதான
ஆலமரம் அதிசயம்!

அதிசயம்! அதிசயம்!
அடையாற்றில் அதிசயம்! - அது
ஆலமரம் வளர்ந்திருக்கும்
அற்புதமாம் ரகசியம்!

ஆயிரம்பேர் வந்தாலும்
அதன் அடியில் தங்கலாம்.
அமைதியாக இருக்கலாம்.
ஆனந்தமே கொள்ளலாம்.