பக்கம் எண் :

மலரும் உள்ளம்83

தோட்டம்

தோட்டம் நல்ல தோட்டம் - நம்மைச் 
   சொக்க வைக்கும் தோட்டம்.
கூட்ட மாக நாமும் - ஒன்றாய்க் 
   கூடி ஆடும் தோட்டம்.

பள்ளி முடிந்த உடனே - முன்
   பாய்ந்தே ஓடி வருவோம். 
புள்ளி மானைப் போல - நாமும்
   துள்ளிக் குதித்து மகிழ்வோம்.

வண்ண வண்ண மலரால் - நம்மை
   மகிழ வைக்கும் செடிகள்!
தின்னத் தின்னப் பழங்கள் - மேலும்
   தின்னக் கொடுக்கும் மரங்கள்!

கொஞ்சும் கிளியின் குரலும் - கருங் 
   குயிலின் இசையும், அடடா!
நெஞ்சை அள்ளு கிறதே! - இதை 
   நினைக்கும் போதே இன்பம்.