வித்தைக்காரன்
வித்தைக் காரன் - நல்ல
வித்தைக் காரன் - ஜோராய்
வேடிக்கை காட்டிவரும்
வித்தைக் காரன்.
சத்தம் போட்டே அழைத்திடுவான்
தமுக்கை ஓங்கி அடித்திடுவான்.
எத்த னையோ வித்தைகளை
எங்க ளுக்குக் காட்டிடுவான்!
(வித்தைக்காரன்)
கம்பம் ஒன்றில் ஏறிநிற்பான்;
கரகம் ஒன்றைத் தலையில்வைப்பான்;
பம்ப ரம்போல் சுழன்றேஆடிப்
பார்த்த பேரைத் திகைக்கவைப்பான்!
(வித்தைக்காரன்)
கொட்டை ஒன்றைத் தரையில்வைப்பான்;
கூடை போட்டு மூடிவைப்பான்.
எட்டு நிமிஷம் ஆகுமுன்னே
எடுத்துப் பார்த்தால் மாஞ்செடியாம்!
(வித்தைக்காரன்)
|