பக்கம் எண் :

92மலரும் உள்ளம்

சாலை நடுவே நின்று பேசல்
   தப்பு, தப்பு, தப்பு தம்பி.
நாலு போராய்க் கையைக் கோத்து
   நடந்து போக வேண்டாம் தம்பி.
(பார்த்துப்)

பாதித் தூரம் வலது பக்கம்
   பார்த்துச் சாலை கடப்பாய் தம்பி.
மீதித் தூரம் இடது பக்கம்
   மேலும் பார்த்துச் செல்வாய் தம்பி.
(பார்த்துப்)

சாலை ஓரம் நடந்து சென்றால் 
   சங்க டங்கள் இல்லை தம்பி.
சாலை விதிகள் தெரிந்த வர்க்குச் 
   சற்றும் கவலை இல்லை தம்பி.

பார்த்துப் போ தம்பி - நன்றாய்ப்
பார்த்துப் போ தம்பி.
பள்ளிக் கூடம் செல்லும் போது
பார்த்துப் போ தம்பி.