பக்கம் எண் :

96மலரும் உள்ளம்

என்ன விரும்பிக் கேட்ட போதும்
   இல்லை யென்றே சொல்லிடாள்.
சொன்ன தெல்லாம் வாங்கித் தந்து
   சிரிக்க வைத்தே மகிழுவாள்.
(சின்னஞ்)

கெட்டிக் காரன் என்று சொல்லிக்
   கட்டி அணைத்துக் கொள்ளுவாள்.
தொட்டி லிட்டுப் பாட்டுப் பாடித்
   தினமும் தூங்கப் பண்ணுவாள்.
(சின்னஞ்)