எங்கள் பள்ளி
எங்கள் பள்ளிக் கூடமே
எளிமை மிக்க நிலையமே.
அங்கே சென்று கற்பதால்
அறிவு மேலும் வளருமே.
உளமும் அறிவும் பண்பட
ஊட்டும் நல்ல கல்வியை.
களங்க மின்றி வாழவே
காட்டும் நல்ல வழிகளை.
கடவுள் பணியைப் போலவே
கல்விப் பணியும் சிறந்ததாய்த்
திடமாய் நம்பித் தினமுமே
தேர்ந்த கல்வி தருபவர்
எங்கள் கல்விச் சாலையில்
இருக்கிறார்கள். ஆதலால்,
இங்கே நாங்கள் யாவரும்
இன்ப மாகப் பயில்கிறோம்.
|