பக்கம் எண் :

வேங்கையே எழுக!

தன் கையே தனக்குதவி

தன் கண்ணாலே பார்த்திட முடியும்
தன் காதாலே கேட்டிட முடியும்
தன் அறிவாலே உணர்ந்திட முடியும்
தன் காலாலே நடந்திட முடியும்
தன் கை தானே தனக்கரும் உதவி?
இது தான் உலகத்தியற்கை; இதனை
பொதுமொழி என்னும் புதுமொழிக் கெண்ணுக!

பிறன் கண்ணாலே பார்த்திட முடியுமா?
பிறன் காதாலே கேட்டிட முடியுமா?
பிறன் அறிவாலே உணர்ந்திட முடியுமா?
பிறன் காலாலே நடந்திட முடியுமா?
பிறமொழியாலே பேசலும் எழுதலும்
அறவொளி காணலும் அரிது! பேதமை!

இவைதாம் முடியும் என்றால், எவரும்
தாய்மொழி விட்டு பிறமொழி தழுவலாம்
ஆளவந்தர அதிகாரத்தால்
மாள நினைப்பது மடமைச் செயலே!




( 5 )





( 10 )





( 15 )

தமிழ் உயர்ந்தால் தமிழன் உயர்வான்

தமிழுயர்ந்தால்தான் தமிழன் உயர்வான்!
தமிழப் பகையாளனும் தானே பெயர்வான்!     (தமிழ்)

தமிழுக்குத் தொண்டு
   தரும்புலவோர்கள்
தமிழ்க்கனி மரத்தினைத்
   தாங்கிடும் வேர்கள்!
கமழ்புது கருத்துக்குப்
   பலபல துறைகள்
கற்றவர் வரவர
   கவின்பெறும் முறைகள்!               (தமிழ்)

எங்கும் எதிலுமே
   தமழத்முதூட்டு
இங்கிலீசை இந்தியை
   இடமிலா தோட்டு
திங்கள், செவ்வாய், புதன்
   கோள்கட்குச் செல்வாய்
தேடரும் அறிவியல்
   எண்ணங்கள் வெல்வாய்!               (தமிழ்)




( 20 )




( 25 )





( 30 )




( 35 )

தீமை தீமை

வேற்றுமைக்குக் காரணங்கள் நிறங்கள் தாமா?
வேற்றுமைக்குக் காரணங்கள் மொழிகள் தாமா?
வேற்றுமைக்குக் காரணங்கள் இனங்கள் தாமா?

வேற்றுமைக்குக் காரணங்கள் இவைதாம் என்றால்,
போற்றுகிற -- மானுடமும் மனிதன் -- என்னும்
பொருள்மொழிகள் பொருளற்றுப் போய் விடாதா?

வேற்றுமைக்குக் காரணங்கள் இரண்டே -- ஒன்று
வியப்பூட்டும் கல்வி; மற் றொன்று பணம் என்பேன்.
கல்வியினால் மனிதரெலாம் நிறம் மறப்பார்;

கல்வியினால் மனிதரெலாம் மொழி மறப்பார்;
கல்வினால் மனிதரெலாம் இனம் துறப்பார்
கல்வியினால் நாகரிக வளர்ச்சி யுண்டு.

கல்வியினால் பண்பாட்டின் வாழ்வும் உண்டு
கல்வியினால் பணம்கூட கால்தூசாகும்.

கல்வியினால் மனிதமனம் ஒருமை காணும்
கல்வியதும் தாய்மொழியில் ஆழ்தல் ஒன்றே.

தாய்மொழியைக் கல்லாத ஒருவன் வேறு
தரைமொழிகள் கற்பதெலாம் வெறும் கூத்தாகும்.

தாய்மொழியே சிந்தனைக்கு மலையூற்றாகும்
தாய்மொழியாம் தமிழ்மொழிவிட்டாள வந்தார்.

பாய் மரமே இல்லாத படகில், உள்ள
பயன் படுநல் துடுப்பெறிந்து பயணம் செய்ய

ஓய்வின்றி எல் லோரும் உகந்து செல்வோம்
ஒப்புகநீர் 'பொதுப்படகு' நமக் கென்கின்றார்.

இந்தியா ஒருநாடு நாமெல்லோரும்
இந்தியர்கள் என்பதனை ஒப்பா மக்கள்

இந்திஎனும் தனிமொழிக்குப் பகைவர் அல்லர்
இந்தியர் நாம் எனச்சுரண்டும் வடக்குத் தெற்கு

விந்தியத்திற் கிருபாங்கும் நடக்கும் சூழ்ச்சி
வேற்றுமைகள் வெறுக்கின்றோம ; ஒருமைப் பாட்டை;

எந்தமிழர் போலெவர்தாம் உலகில் சொன்னார்?
இந்திதிணி்ப் பிருதிசைக்கும் தீமை தீமை!

செந்தமிழைப் பொதுமொழியாய் ஆக்குதற்குச்
சிந்தித்த துண்டாநீர ? சீர் தமிழ்போல்

எந்தமொழி எளிதிங்கு? வேர்ச்சொல் மிக்க
எளியமொழி அரியமொழி தமிழே ஆகும்.
தந்தடிமை யாய்கிற்கும் ஆளவந்த
தமிழ் நாட்டு தலைவர்இதைத் துணிந்து சொல்லார்:

எந்தவகை யேனும்தம் பதவி காக்கும்
எண்ணத்தார்க் கேதறிவு? மொழியின் பற்று?

முந்துவட வாரியத்தை முறித்தவர்யாம்
மூவேந்தர் மரபுவழி வந்தவர் யாம்!

இந்திய நாட்டரசியலை ஒப்பவில்லை,
இந்திமொழி பொதுவாக்கல் விரும்பவில்லை.

அந்தஇழி செயல்செய்ய அடிமைக் கூட்டம்
ஆளுவார் பக்கத்தில் இருப்பதுண்மை,

வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் வேலை வேண்டாம்.
விடுதலையால் கெடுதலையா தீமை தீமை!






( 40 )






( 45 )






( 50 )






( 55 )







( 60 )






( 65 )






( 70 )






( 75 )







( 80 )




சீறும் புலிகள் நாம்

நாட்டை ஆளப் பிறந்தவர் நாம் -- எந்த
நாளும் அடிமைப் படமாட்டோம்
கேட்டைச் சுமப்பதுவா மக்கள் -- நமைக்
கீழறுக்கும் அறியாமைகளின்
கோட்டை தகர்ப்பது நம்கடமை -- உழையா
குறுக்கு நூலினர் பாழ்மடமைப்
பூட்டை யுடைப்பது நம் ஆண்மை -- வரிப்
புலியே எழுந்துஆள் நம் மேன்மை!

ஆள நினைப்பவர் யாருக்குமே -- நாம்
ஆட்பட்டிருந்ததில்லை,
தாள முடியாத போர்களினால் -- பிற
சமய மதங்களின் வேர்களினால்
நீளத் துயின்றனம் பாழ்அடிமை -- நமை
நிமிரா தழித்தது ஆரியமே;
மீளப் பெரியார் பெருந்தொண்டு -- இடி
மின்னலாய்ப் பாய்ந்தது கட்டறுத்தோம்.

முத்தமிழ்க் குருதியில் சேர்ந்திருந்த -- பல
மூடத் தனத்தின் நஞ்செடுத்தார்
புத்தம் புதிய தமிழ்க்குருதி -- நம்
பொன்னுடல் புத்துணர்வு புத்துணர்ச்சி
எத்திசையும்பெற ஏற்றிவிட்டார் -- இனி
எங்குண்டு நம்மை எதிர்ப்பவர்கள்?
செத்தனர் செத்தனர் நமைமிதித்தோர் -- இனிச்
சீறும் புலிகள்நாம் வெல்பவர் யார்?


( 85 )




( 90 )





( 95 )





( 100 )




( 105 )

இந்திப் பேயாட்டம்

திரும்பி வருகிறதாம் இந்திப் பேயாட்டம்
திராவிடர் திரும்புக எடுக்கும் நோய் ஓட்டம்!
                    திரும்பி வருகிறதாம் ...

கரும்பிருக்கையில் கசந்திடும் இந்தி -- எட்டிக்
காயையா விரும்புவர், தின்பர் வருந்தி
திருந்தி வந்திடும் செந்தமிழ்க் கல்வி -- இனிச்
செத்தெழ விடுவதோ போர்க்கெழு முந்தி!
                    திரும்பி வருகிறதாம் ...

வடக்கின் வாய்க்கொழுப்பால் முன்னொரு காலம்
வன்கல்லைச் சுமந்ததை அறியுமே ஞாலம்!
இடக்கினால் இந்தியால் இனிஅவர் ஓலம்
இடுவதும் இடர்வதும் அழிவுறும் -- கோலம்!
                    திரும்பி வருகிறதாம் ...

பெரியாரின் தொண்டர்கள் கொண்டஓர் சீற்றம்
பிழைபடும் அரசியல் போக்கினால் ஏற்றம்
வெறியாக மாறிற்றே அரிமாவின் தோற்றம்
விரைந்தெழு தமிழரை எதுவந்து மாற்றும்?
                    திரும்பி வருகிறதாம் ...

பத்தாண்டின் முன்னே பட்டதோர் பாடு
பாழ்பட்ட ஆட்சி மறந்ததோ சூடு?
முட்டாள்கள் என்றுமே முழுமூச்சினோடு
மோதி டப்பார்க்கிறார் முற்றுகை சுடுகாடு!
                    திரும்பி வருகிறதாம் ...





( 110 )






( 115 )





( 120 )







( 125 )

அரிமா இடத்தில் நரிமாவா?

கொடியர் வடவர் இந்தியினைக்
குழந்தைக் கல்விக் கூடத்தில்
படிக்கச் சொல்லி நுழைக்கின்றார்
பாம்பின் நஞ்சை மறந்தழகு

வடிவில் மயங்கி வாழ்க்கையினை
மடித்துக் கொள்ளச் சொல்கின்றார்
ஒடிய அவர்தம் முயற்சிகளை
ஒடுக்கி நறுக்கித் துறந்திடுவீர்!

ஒத்துப் போகா உறவினர்கள்
உலகில் நமக்கிங் காரியரே
செத்துப் போன மொழியுடலில்
செழுமை யற்ற இந்திமொழி
பித்துப் பிடித்தே ஆட்சியினால்
பெருமைத் தமிழுக் கிடையூறாய்த்
தொத்திக் கொள்ளப் பார்க்கிறது
தொலைத்தல் தமிழர் கடனாமே!

அரிமா உலவும் காட்டினிலே
ஆரியம்போல் வாழ்கின்ற
நரிமா வுக்கும் இடமுண்டு
மறுக்க வில்லை நாம், ஆனால்
அரிமா இடத்தில் நரிமாக்கள்
அட்டகாசம் செய்வதுவா?
சரிப்படாது தமிழர்களே
சாய்ப்பீர் இந்தி நரித்தனத்தை!

எச்சிச் சோறு போலிந்தி
எல்லா மொழியின் கலப்படமாம்
அச்ச மிலாது நம்நாட்டில்
அமுதத் தமிழைக் கெடுப்பதுவா?
பிச்சைப் பதவிப் பித்தர்களைக்
காட்டிப் பிழைக்கும் எத்தர்களை
மிச்ச மிலாது செய்வதுவே
மேன்மைத் தமிழர்க் கழகாகும்!






( 130 )






( 135 )



( 140 )





( 145 )





( 150 )





( 155 )


இந்தித் திணிப்பு

இந்தி திணிப்பாராம் -- ஒருமையை
வந்து பிணிப்பாராம்

கந்தலைத் தைத்தஓர் காட்சியைப் போலுள
இந்திய தேசிய எண்ணத் துழல்பவர்

ஒற்றுமைக் குழைப்பவராம் -- மக்களின்
பற்றினுக் குழைப்பவராம்!

மொழிவழி மாநிலம் முற்றும் பிரித்தபின்
அழிவை விளைத்தவர் உறவை அறுத்தவர்

நாட்டை வருந்தாராம் -- மொழி
ஏட்டைத் திருந்தாராம்!

பத்தாண்டின் முன்னே பத்தாம் பசலிகள்
செத்தோம் பிழைத்தோம்என் றோடிய தீயர்கள்

இந்தி திணிப்பாராம் -- ஒருமையை
வந்து பிணிப்பாராம்!




( 160 )







( 165 )







( 170 )

இந்தி எதற்கு?

சீர்மிகுந்த நாட்டினிலே இந்தி எதற்கு?
சிக்கலினை வளர்ப்பதற்கு ஆட்சி எதற்கு?
ஊர்கள்தோறும் வடவர்இந்தி ஓட்டம் எதற்கு?
ஒற்றுமையைக் கெடுப்பதற்கு ஆட்சி போதாதோ?

சூழ்ச்சியொடும் இந்தியினைக் கொணர்வ தெதற்கு?
தொல்லையினை விலைகொடுத்து வாங்கல் எதற்கு?
வெற்றிபெற்ற தமிழிருக்க இந்தி எதற்கு?
வீரர்களின் தோள்திணவால் வீழ்ச்சியுறற்கா.

கற்பதற்கு வழிகளில்லை கலகம் எதற்கு?
காப்பதற்குத் திட்டமில்லை கருத்துமில்லையே,
தெம்பில்லாத மக்களிடை தீமை எதற்கு?
திராவிடத்தில் ஒற்றுமையைத் தீர்ப்பதெதற்கு?

வம்புசெயும் தீங்குவட இந்தி எதற்கு?
வளரும்இளம் தலைமுறையை ஒழித்துக் கட்டவா?
அருவருப்பு வறுமையினை அறுக்க மாட்டாமல்
அதிகார வாள்எடுத்தே அச்சுறுத்தல் ஏன்?

கரும்பிருக்க கனியிருக்க வேம்பும் எதற்கு?
கன்னித்தமிழ் இருக்க இந்திக் கழுதை எதற்கு?
தாழ்வுயர்வு மாறவில்லை சாதி சமயத்தின்
தறுதலைகள் ஒடுக்கவில்லை தலைமை எதற்கு?

வாழ்வுயர்த்தும் தாய்மொழியின் வன்மை இருக்க
வடமொழியின் வைப்பாட்டி இந்தி எதற்கு?
கமழ்உரிமை விடுதலையின் கட்ட விழ்க்காமல்
கலக நச்சுக் கண்ணீர்ப்புகை இந்தி கலப்பதேன்?

தமிழ்மொழிக்கே உலகையாளும் தகுதியிருக்கு
தமிழ்மகனே இந்திப்பாம்பின் தலையை நறுக்கு!




( 175 )







( 180 )






( 185 )




( 190 )





( 195 )


குருதி பொங்கினால் ...

குருதிபொங்கினால் தயங்காது -- தமிழ்க்
குருளைக் கூட்டங்கள் மயங்காது:

இருப்பதல்லது
தமிழோடு இறப்பதென்றிடும்

கொள்கை மறவர் உயிர் தயங்காது!
உண்மையின் கண்கள் இமைக்காது -- அற
உணர்வுத் தோள்களும் பொறுக்காது!

அண்டும் பிறமொழி
ஆதிக்கப் போரினில்

ஆளவந்தர் குரல் நிலைக்காது!

கோளரிகள் மனம் சலிக்காது -- சிறு
குள்ள நரித்தனம் பலிக்காது!

ஆள நினைப்பவர்
அற்பமொழித்திணிப்

பத்தனையும் எரிமலைமுன் நிலைக்காது!
விடியலில் கருக்கலுக் கிடமேது?
விளைச்சலில் களைகளைப் பிடுங்காது

கிடப்பவர் அல்லர்யாம்
தமிழர்கள் வீரம்.

கிளர்ச்சியில் வெல்லா தொடுங்காது!




( 200 )







( 205 )







( 210 )





( 215 )


காற்றை விதைத்துப் புயலை அறுக்காதீர்


எங்களின் வாழ்வும் எங்களின் வளமும்
எங்கள் தாய்மொழி இன்தமிழ்ச் செல்வமே!

தமிழ்எங்கள் உயிர், தமிழ்எங்கள் உடல்
தமிழ்வாழ்வதனால் யாம்வாழ்கின்றோம்!
தமிழ்எம் உணர்வு! தமிழ்எம் உணர்ச்சி!
உண்ணும் உணவும் பருகும் நீரும்
தமிழே! தமிழே, சாவா மருந்து!
தேனின் இனிமை! செழுமலரின் மணம்!

தமிழ்தான்
எங்களின் கூர்வாள், எங்களின் கேடயம்
எஃகில் காணா வலிமையின் இருப்பு!
நீரின் தெளிவு! நெருப்பின் சுடர் தீ!

காலப் பழமையால் வைரம் பாய்ந்தது!
நாகரிகத்தின் நாற்றங் காலது!
எம்மொழிக்கும் அது ஈடிணையற்ற
செம்மொழி! உலகச் சிந்தனைக்கெல்லாம்
ஊற்றாய்த் துலங்கும் உண்மையின் பைஞ்சுனை!

அதனில் இந்தி நஞ்சைக் கலப்பது
பொதுமை நோக்கிப் புதுமைக்கேகும்
மக்களை மாய்க்கும் மடச்செயல் ஆகும்.
சிக்கல் நெருப்பில் எண்ணெய்யைச் சேர்ப்பதா?
தீமையின் விளைவு தீமையே,
காற்றை விதைத்துப் புயல்அறுக்காதீர்!




( 220 )




( 225 )






( 230 )




( 235)




( 240 )

இந்தியை எதிர்ப்போம்

செந்தமிழ்த்தாய் அழைத்தாள் எம்மைச்
செந்தமிழ்த் தாய் அழைத்தாள்
வரும் இந்திக்குளம் பதைத்தாள்
எங்கள் தோள் வெற்றித் தோள்; இங்கு
வந்தால் பகைப்படை தூள்! தூள்! தூள்!

எங்களை நோக்கிச் சொன்னாள் வந்தால்
இந்தியை நீக்கச் சொன்னாள்
தண்டிப்போம் கண்டிப்பாய்
எங்கே வாழ்வ தந்த நாய்? நாய்? நாய்?

பைந்தமிழைக் காப்போம்
எங்கள் பைந்தமிழைக் காப்போம்
இந்திப் பட்டாளத்தைத் தீர்ப்போம்.
பதுங்கோம் ஒதுங்கோம்
முந்திடும் வேங்கைகள் நாம்! நாம்! நாம்!

இருக்கும் தமிழ்ச்சோலை நாம் இருக்கும் தமிழ்ச் சோலை
தனில் இந்திக் கென்ன வேலை?
இங்கினிமேல் கால் வைத்தால்
உரிந்துபோம் உடம்பின் தோல்! தோல்! தோல்!





( 245 )







( 250 )






( 255 )



எல்லாத் துறையிலும் இந்தி ஒழிக

இந்தியினை மாணவர்கள் வெறுக்க வேண்டும்
இந்தியினைப் படிப்பதற்கு மறுக்க வேண்டும்
இந்தி சொல்ல வருவோரைச் சிரிக்க வேண்டும்
இந்தி வைத்த தேர்தலினை முறிக்க வேண்டும்
இந்திபடிக் காதவர்க்கோ அலுவல் இல்லை
என்றுரைத்தால் அவ்வரசை ஒழிக்க வேண்டும்
இந்தியிலே தாள் கண்டால் கிழிக்க வேண்டும்
இந்தியுள்ள பலகைகளை உடைக்க வேண்டும்.

அஞ்சலட்டை தனிலிந்தி காணப்பட்டால்
அனைவர்க்கும் முன்வைத்தே எரிக்க வேண்டும்

நெஞ்சத்தில் இந்திமொழி பரப்பு கின்ற
நிறுவனத்தின் மூடுவிழா நடத்த வேண்டும்
நஞ்சுகாண் இந்தி என்று சொல்லும் போது
நமதென்று செல்லுகின்ற நாயைக் கண்டால்
அஞ்சாது தமிழறத்தால் திருத்த வேண்டும்
ஆளவந்தார் சிறைஎன்றால் மகிழ வேண்டும்.

தமிழ்காத்தல் மாணவரின் சொந்த வேலை
தாம் நினைத்தால் ஆளவந்தார் எந்த மூலை?
உமியன்றோ இங்குவந்த இந்தி மேதி
ஒன்றுபட்டால் மாணவர்கள் தெரியும் சேதி
உமிபறக்கும் மாணவர்கள் மூச்சு விட்டால்
இந்திஎனும் எச்சிலைதான் என்ன ஆகும்?
சிமிழ்க்காமல் பார்த்தாலே இந்தி சாகும்
திருவாசகம்பாடி முடிக்கலாகும்.


( 260 )




( 265 )







( 270 )





( 275 )




( 280 )

தமிழர் ஓங்கினர் வாள்

தாலமுத்து நடராசனைத்
   தந்ததும் போதாதா? -- அவனுயிர்
   வெந்தது போதாதா?

ஆளவந்தார் தமிழரை
   அடித்ததும் போதாதா -- சிறையில்
   மடித்ததும் போதாதா?

இந்தியினால் உங்கள் தீ
   எண்ணம் நிறைவேறுமா? -- தமிழர்
   எண்ணம் நறைவேறுமா?

செந்தமிழ்ப் படைப் புலிகள்
   சீறிப் புறப்படல்பார் -- தடை
   மீறிப் புறப்படல் பார்!

விருப்பிலா நஞ்சை
   வேண்டிப் புகுத்துகின்றீர் -- உரிமை
   தாண்டிப் புகுத்துகின்றீர்!

உருப்பட மாட்டீர்கள்
   ஒடிந்ததும் சட்டங்கள் தூள் -- கோடித்
   வதமிழர்கள் ஓங்கினர் வாள்!



( 285 )






( 290 )







( 295 )





( 300 )

அடிமைத் தமிழன் தொல்லை

அவனுக்கு வை எல்லை

அடிமைத் தமிழன் தந்தானே தொல்லை
ஆரியப் பாம்புக்குச் சட்டத்தின் பல்லை!

குடிகேடர் என்கின்ற
     குற்றத்தின் சொல்லை
கொண்டானே தந்தானே
     கொடுமைக்கோர் அளவில்லை.

மாண்புப் பெரியாரைச் சிறையினில் அடைத்தார்.
மானத் தமிழரின் தலையினை உடைத்தார்.

காண்கின்ற கண்ணில்லை
     கருத்தில்லை மக்களைப் புடைத்தார்
காட்டிக் கொடுத்தார்க்குக்
     காசுகள் படைத்தார்!

ஊர்வல மாதரைத் தடியாலே தடுத்தார்
     உயிரன்புத் தாயர்க்குத் தொல்லைகள் கொடுத்தார்.
யார்பொறுப்பார் இனி
     தீப்பந்தம் எடுத்தார்
ஆள்வோரின் சட்டத்தில்
     தீயினை மடுத்தார்!
தமிழனே தமிழர்க்குச் செய்தானே கொடுமை
     தாங்குவ தில்லைநாம் தடுப்பது கடமை.
உமிழ்ந்திட்டோம் எச்சிலை
     திருந்தட்டும் அடிமை
உதவாக்கரைக் கென்ன
     அமைச்சென்ற உடைமை?






( 305 )






( 310 )





( 315 )




( 320 )



வடக்கின் இடக்கு அடக்கு

இந்திப் பகையை எழுப்பிவிட்டது ஏதும் கெட்ட வடக்கு
செந்தமிழா இன்னுமென்ன சிறுத்தையிடம் இடக்கு
வெந்தபுண்ணில் வேலைப் பாய்ச்சும் வெறித்தனத்தை அடக்கு!

இந்திஎனும் வெறிநாயை ஏவி விட்டது வடக்கு
சொந்தநாட்டில் சொந்தமொழி தொல்லைப் படா தடக்கு,
கந்தகத்தில் தீயை வைத்தார் கனன்றெழுந்து மடக்கு!

இந்திமொழி அதிகாரத்தேள் ஏந்திவரும் கொடுக்கு
வந்தேறிகள் சூழ்ச்சிகெட வாகைப்போரைத் தொடக்கு
முந்துவட ஆட்சிஎலும்பு முரிந்தொடிய அடக்கு!

( 325 )





( 330 )



புறப்பாட்டுப் பாடு

கோட்சேக்கள் கூட்டம் கொணர்ந்து இந்தி
கொலைகாரர் கொள்கையை நடுங்கச் செய் முந்தி!

ஆட்பட்டிருந்திடோம் அடிமைப்படோம் என்றே
ஆர்த்தெழு போர்த்தொடு அனல்காற்றாய் உந்தி!

ஆரிய மாயையால் அழிந்ததே நாடு
ஐந்தாம் படைக்கெல்லாம் அமைச்சென்ன கேடு?

சீரிய வாழ்வுண்டு செந்தமிழ்ச் சீற்றம்
தீயரைத் தீய்க்கட்டும் புறப்பாட்டுப் பாடு!


( 335 )







( 340 )

வரலாற்றில் வெற்றிகொள்

தில்லித் திமிருக்கோர் மறுப்பு
திராவிடர் காட்டுக வெறுப்பு
தொல்லைக்குமேல் தொல்லை
சுமைசுமையாய்த் தந்தால்
துடுக்குத்தனங்களை நறுக்கு!

இந்திமொழிக்கென்ன திணிப்பு
ஏன்வேண்டும் இந்தியப் பிணிப்பு?
வந்தேறிகள் சொல்லும்,
வடக்காட்சி ஒப்பிட்டோம்
வகுப்போம் தெற்கெல்லைத் துணிப்பு!

வடக்குக்கு நாமில்லை அடிமை
வாழ்த்திடுவோம் தாழ்ந்திடோம் மிடிமை
இடக்குச் செயுமிந்தி
எம்மொழி எம்இனம்
ஏறிமிதிப்பது கொடுமை.

தொற்றுநோய் ஒட்டுணி வடக்கு
தொல்லைத்திடப் போர்ப்படை தொடக்கு
ஒற்றுமை கொண்டவர்
ஓங்கிய எண்ணத்தார்
உருப்பட தீப்பகை அடக்கு!

பெற்றுவிடவேண்டும் நாடு
பிரிவுற வேண்டும்தென்னாடு
வெற்று நினைவிலே
வேங்கை மறவரே
வெற்றிகொள் வரலாற்றினோடு!




( 345 )





( 350 )





( 355 )




( 360 )





( 365 )

இந்தி முக்காலமும் இல்லை என்று முழங்கு

இன்றைக் கெழாமல் நீ
என்றைக் கெழுந்திப்

   பன்றியைக் கொன்றழிப்பாயோ; -- பகைப்
   பார்ப்பை ஒழித்தழிப்பாயோ?

இப்பொழுது தொழாமல் நீ
எப்பொழு தெழுந்திந்திக்

   குப்பையைத் தீய்த்திடுவாயோ? -- வஞ்சக்
   குணத்தாரை மாய்த்திடுவாயோ?

இந்நொடி எழாமல் நீ
எந்நொடி எழுந்திந்தி

   மந்தியைத் துறத்திடுவாயோ? -- தமிழ்
   மாங்கொல்லை புரந்திடுவாயோ?

இக் காலத் தெழாமல் நீ
எக் காலத் தெழுந்திந்தி

   முக்காலத் தில்லை என்றுரைப்பாய் -- வெற்றி
   முழக்குக முழக்குக சிறப்பாய்!





( 370 )








( 375 )







( 380 )