பக்கம் எண் :

இசையமுது
(இரண்டாம் பகுதி)

நாடு்
வேங்கைக் குகையில்

இநீள் வையம் எதிர்த் திடினும்-அஞ்சுதல் இல்லாத்
தோள் வாய்ந்த மூவேந்தர்-சீர் ஆட்சி

நாள் என்ற கடல் வெள்ளம் தான் கொண்டு போனதே
கோள் வாய்ந்த பெருந்தீயர் வரவால் இருளானதே!

யாவரும் ஒன்றே என வாழ்ந்தோமே நாங்கள்
இனம் சாதி மதவெறி அலங்கோலம்.

மேவி வீழ்ச்சி நிலை அடையவும் ஆனதே
வேங்கைக் குகைக்குள் நரி வாழ்ந்திடவும் ஆனதே.






( 5 )

எதற்கும் மேல்
ஆதமிழ் நாடுதான் மேலான நாடு
தமிழர்க் கெல்லாம் மற்றவை காடு                   (த)

கமழ் தென்றலே நடமாடு நாடு
காவிரி நீள்வைகை பாயும் நாடு                     (த)

கன்னல் மா பலாவும் வாழை கமுகு
செந்நெல் யாவுமே மலிகின்ற நாடு                   (த)

பொன்னின் வார்ப்படம் போல் மாதரோடு              
போர் புரி மாவீரர் வாழும் நாடு                     (த)


( 10 )







( 15 )
மீட்சி எப்போது?

காலைமுதல் மாலைவரை ஏருழுவர்
பசியால் மெலிந்து நோயினில்வாடி                   (கா)

தோலைமூட ஆடைஏதும் இலையே-உடல்
தூய்மைக்கும் யாதொருவழியுமே இலையே            (கா)

அண்டி வாழ ஒருவீடில்லை. பிள்ளைகள்
கல்வி அடையவோ வழியில்லை. மீட்சியும்
கண்டதில்லை நாளுமே வீழ்ச்சி எனில்
கோரும் பொதுவாழ்வு தூய்மை பெறுமா?             (கா)






( 20 )
                     விடுதலையே

உன்னைத்தான் விடுதலையே,
     உள்ளத்தின்               ஒளியே

ஓடிவா திராவிடத்தில்
     ஏ செஞ்சொல்             கிளியே

தின்னத்தான் சோறில்லை செம்மைக்கோர் வழியில்லை
என்போர்கள் இல்லாமே எல்லார்க்கும் நலம் அருள்வாய்
உன்னைத்தான் விடுதலையே!

உள்ளத்தே நீதான்
உணர்வினிலும்                நீயே

ஓடிவா திராவிடத்தில்
ஏ அன்புத்                  தாயே

கள்ளத்தார் கொந்தாமல் கண்ணீர்தான் சிந்தாமல்
வெள்ளத்தேன் அவரவரின் வீத்ததால் பொழிபவளே
உன்னைத்தான் விடுதலையே!

ஒருமனிதன்வாட
ஒப்பா நன் னிலையே!
ஓடிவா என் நாட்டினில்
ஏ இன்பப் பொருளே
திருவுடையார் பிடிவாதஞ் செய்தீமை எதிர்மோத
வரும்அனலே; மக்களெலாம் வாழ்த்துகின்ற ஒளிவிழியே
                         உன்னைத்தான் விடுதலையே!


( 25 )






( 30 )








( 35 )






( 40 )
தோட்டம்!

ஊருக்குப் போய்வரும் நாளையிலே-மிக
   உரத்திடும் வெய்யில் வேளையிலே

ஆருக்கும் தாங்காத பசிகொண்டு-நான்
   அங்கொரு தோட்டத்தில் புக்கக் கண்டு

பழங் கொடுத்தது மாமரம்-என்
   பசி தொலைத்தது மாமரம்

நிழல் கொடுத்தது மாமரம்-துயர்
   நீங்க வைத்தது மாமரம்

தாகம் தணித்தது தென்னைமரம்-மணம்
   தந்து மலர்ந்தது புன்னைமரம்-உற்

சாகம் பிறந்தது வீடுவந்தேன்-மரம்
   உதவி செய்ததை நான் நினைந்தேன்.



( 45 )







( 50 )