பக்கம் எண் :

இசையமுது

(தேனருவி )

தமிழ்
தன்னேரிலாத தமிழ்

தன்னேரிலாத தமிழ் அன்னையே-உனை வாழ்த்தினேன்
இன்னல் தவிர்த்தாள் என்னையே         தன்னேரிலாத.....

முன்னைத் தோன்றிய மக்கள் முதன்முதல் பேசிய
மொழியே! மொழியே! மொழியே!, எனவே வாழ்த்தும்,
                                  தன்னேரிலாத.....

தென்னவன் சேரன் சோழன் செம்மையிலே வளர்த்த
திருவே! திருவே, திருவே புகழ் மிகுந்த
மன்னும் குமரிமுதல் பனிமலை மட்டும் வாழ்ந்த
வாழ்வே! வாழ்வே வாழ்வே எனவே வாழ்த்தும்,
                               தன்னேரிலாத.....

ஆரியர் எதிர்ப்புக்கும் அசையாமல் வாழும் எங்கள்
அன்பே! அன்பே,அன்பே புகழ் மிகுந்த
சீர்பெறு முத்தமிழே தெவிட்டாத புத்தமிழ்தே
செல்வி! செல்வி, செல்வி எனவே வாழ்த்தும்.
                               தன்னேரிலாத.....

முதன்முதல் செந்தமிழ் நான்மறை செப்பிய
முத்தே! முத்தே, முத்தே புகழ்மிகுந்த
புதுவாழ்வு காட்டிடும் திருக்குறள் பூத்தபூம்
பொழிலே! பொழிலே, பொழிலே எனவே வாழ்த்தும்,
                               தன்னேரிலாத.....








( 5 )






( 10 )






( 15 )
எதைவேண்டித் தவங்கிடந்தாய்?

எதை வேண்டித் தவங் கிடந்தாய்?
என்தமிழ்த் தாயே-நீயே              எதைவேண்டித்.....

எனதுயிரே, உடல், பொருளே நீ       எதைவேண்டித்.....

கதிதரு தமிழ்க் கட்டாயக் கல்வியா?
கலைமிகு முத்தமிழ் வித்தார சங்கமா?
புதுமுறை விஞ்ஞானமா? எலாம்
பொதுவாக்குதல் உத்தேசமா?-சொல் எதைவேண்டித்.....
இமயத்தில் பேர்வரைந்த செந்தமி ழன்தோள்
இந்நிவத்தை நன்னிலைக்குள் ஆக்க வேண்டுமா?
சமயம் சாதிகள் அகல யாவரும்
சமம் எனுநிலை அமைய வேண்டுமா?
                              எதைவேண்டித்.....





( 20 )




( 25 )




செந்தமிழ்ச் செல்வம்
     
செல்வ மென்று போற்று
செந்தமிழ் சொல்லை-நீ              செல்வமென்று.....

அல்லலும் நீங்கும் பகையாவும் நீங்கும் செல்வமென்று.....

வெல்வது வேலல்ல; செந்தமிழ் ஒன்றே
நல்லொற் றுமைசேர்க்கும் நன்னெறி சேர்க்கும்
வல்லமை சேர்க்கும் வாழ்வையுண் டாக்கும்
வண்டமிழ் நைந்திடில் எதுநம்மைக் காக்கும்?
தமிழர்க்கு மானம் தனியுயிர்! யாவும்
தமிழே யாதலால் வாழ்த்துவோம் நாளும் செல்வமென்று.....




( 30 )






( 35 )

             
துள்ளி ஆடுவோம்


துள்ளி ஆடுவோம்-வாரீர்
பள்ளுப் பாடுவோம்

வள்ளுவன் இரண்டு திருவடி-இந்த
வையம் அளந்ததை எண்ணி எண்ணி நாம் துள்ளி ஆடுவோம்.....

'வள்' என்று சொல்வது வண்மையாம்-அந்த
வண்மை படைத்தவன் வள்ளுவனாம்-மன்னர்
உள்படு கருமத் தலைமை அலுவல்
ஒன்றுக்கு வள்ளுவம் என்றது கண்டு   துள்ளி ஆடுவோம்.....

அமைச்சர் அவையின் தலைவன்
அகம்புறம் காணும் வலவன்
தமிழ் மக்களின் பகைவரும்-தம்
தலையில் தூக்கி ஆடும் புலவன்       துள்ளி ஆடுவோம்.....

வானுக்குச் செங்கதிர் ஒன்று-புனல்
வண்மைக்குக் காவிரி ஒன்று-நல்ல
மானத்தைக் காத்த வாழஎண்ணு மிந்த
வையத்துக் கொன்று திருக்குறள என்று   துள்ளி ஆடுவோம்.....






( 40 )








( 45 )





( 50 )

விண்ணப்பம் கேள்

விண்ணப்பம்கேள் என் தமிழிசையே-தாயே!
விண்ணப்பம்கேள்!
வண்டமிழ் நாட்டில்உன்
மகன்நான் விடுக்கும்          விண்ணப்பம்கேள்...

புகன்றிடும் எனக்கும் கேட்கும் தமிழர்க்கும்
புரியாத் தெலுங்கில்நான் பாடுதல் வேண்டுமாம்
தகுந்தமிழ் தன்னிலோர் தமிழ்மகன் தமிழில்
தமிழ்நாட்டில் பாடுவதை மறந்திட வேண்டுமாம் விண்ணப்பம்கேள்...

தக்கதோர் இசைக்குத் தமிழ்ஒத்து வராதாம்
தமிழுக்குத் தக்கதோர் இசைஒத்து வராதாம்
இக்காலம் தமிழ்என்ற பேச்சே கூடாதாம்
இனிமேல் தமிழ்க்குமுன்னைய ஓட்டம் ஓடாதாம்
                                  விண்ணப்பம்கேள்...

தமிழ்ப்பாங் கறியாத தமிழினத் தார்க்கே
வானொலிப் பணத்தைத் தருவதற் காக
அமைந்த அதிகாரிகள் செய்யும் அடாச் செயல்
அகலும் வண்ணம் முயலுதல் வேண்டும்
விண்ணப்பம்கேள்...
தமிழர்கள் எல்லாம் உன்மக்கள் அன்றோ?
சற்றே அவர்களை ஒற்றுமை ஆக்குவாய்
இமைத்திடும் நேரத்தில் தமிழின் பகைவர்
எழுந்த சூறைக் காற்றில் துரும்பாய்ப் பறப்பார்
                                  விண்ணப்பம்கேள்...




( 55 )






( 60 )





( 65 )





( 70 )
எனக்கு வந்த அஞ்சல்

கஎனக்கு வந்த அஞ்ச லட்டையில்
இருந்தவை பத்து வரிகள்-அவற்றில்
இருந்தவை நூறு பிழைகள்!

இனிப்பை இணிம்பென் றெழுதி வைத்தார்
இழுப்பை இளுப்பென் றெழுதி வைத்தார்
மனைஎன் றெழுதமணை என்றார் அவர்
மாற்றென்று சொல்ல மாத்தென்றார்
குனம் குனம் என்று குனத்தைச் சொன்னார்
கோவை என்பதைக் கோர்வை என்றார்
கனிநிகர் தமிழறி வில்லாமல்
காட்சியை அவர் காக்ஷி என்றாரே
முப்பத்து மூன்றை முப்பதி மூன்றென்றும்
முட்கம்பி என்பதை முள்க்கம்பி என்றும்
முற்புறம் என்பதை முர்ப்புரம் என்றும்
முட்டியை வேட்டியை முஷ்டி வேஷ்டி என்றும்
இப்படிக் கென்பதை இலமை என்றும்
அப்போ தென்பதை அப்போ என்றும்
அழிவு பெற்றிட எழுதி விட்டனர்

அவைகள் வந்தது பாட்டி செத்தது
சேய் பிறந்தாள் எந்தன் செல்வம்
கவர்ந்துக் கொண்டால் கண்டுச் சொன்னான்
காற்றுபட்டது கடித்து தின்றான்
எவரை கண்டீர் எப்படி சொன்னீர்
என்று தமிழைக் கொன்று குலைத்தவர்
சுவையுள்ள எட்டுத் தமிழ்ப் படங்களின்
தூய தமிழ்எழுத்தாளர்என்றார்தம்மை.




( 75 )





( 80 )




( 85 )




( 90 )





( 95 )
தமிழர்க்கு
வண்மைசேர் தமிழ்நாடு
வண்மைசேர் தமிழ்நா டெங்கள் நாடு
வாழ்த்துவோம் அன்போடு             வண்மை சேர்...

திண்மை யாகிய தோள் வீரர்
திங்கள் முகங்கொள் பெண்கள் வாழும் நாடு வண்மை சேர்...

வண்ணம் பாடியே நடக்கும்
வைகை காவிரி பெண்ணை
தண்ணறுந் தென்றல் பூஞ்சோலை
சாகாத இன்பம் தழைகின்ற நாடு           வண்மை சேர்...

சந்தனம் கமழ் பொதிகை
சந்தப் பறவைகள் பாடல்
சிந்துதேன் பொங்கும் ஆனந்தம்
செந்நெல் வயல்கள் சிறக்கின்ற நாடு         வண்மை சேர்...

பூரிக்கும் தமிழ்க் கவிதை
வாழ்வினுக் கதே ஆவி
பாருக்கே இன்பம் சூழ்விக்கும்
பழநாடு வாழ்வின் பயன்சொன்ன நாடு       வண்மை சேர்...


( 100 )







( 105 )






( 110 )
நீயறியாயோ நிலவே

நீயறியாயோ நிலவே புகல்வாய்
நிலமதில் யாமே வாழ்ந்த நல்வாழ்வை நீயறியாயோ.....

உழவினி லாவது தொழிலினி லாவது
ஒருகுறை இலாமல் யாம் வாழ்ந்த ததனை நீயறியாயோ.....

கலையினி லாவது நிலைமையி லாவது
கவிதையி லாவது யாம்தாழ்ந்த துண்டோ   நீயறியாயோ.....

படையினி லாவது புகழினி லாவது
கடுகள வாவது யார்நிகர் எமக்கே?       நீயறியாயோ.....

உலகொடு வாணிக முறையினி லேனும்
ஒருசிறு தாழ்வு நேர்ந்த துண்டோ?   நீயறியாயோ.....

அறமுறை போர்முறை அழகிய ஓவியம்
அனைத்திலும் யாமே சிறந்திருந் ததனை  நீயறியாயோ.....

( 115 )






( 120 )







( 125 )
தமிழர்கள் இழைத்த தவறு

தமிழர்கள் துன்பத்தைத் தழுவினார்;
கடமையில் வழுவினார்; ஆதலால்,        தமிழர்கள்.....

தமிழ்நெறி தன்னை இகழ்ந்தார்
பிறநெறி தன்னை மகிழ்ந்தார்
நமரெலாம் எக்கேடு கெடினும்
நமக்கென்ன என்று பகைவரைப் புகழ்ந்தார் தமிழர்கள்.....

ஒன்றே அலால் குலமில்லை
ஒருவ னல்லால் தெய்வமில்லை
என்றதோர் தமிழரின் சொல்லை
மறந்ததால் அல்லவா வந்ததித் தொல்லை தமிழர்கள்.....

தமிழை இகழ்ந்தனர் என்று
சொல்லக் கேட்டுவடகோடி சென்று
தமிழ்த்திறம் காட்டினார் அன்று
தலைவன் என்கின்றார்கள் பகைவனை இன்று தமிழர்கள்.....




( 130 )





( 135 )







( 140 )
தமிழ்நாட்டில் ஐந்தாம்படை

உடலுக்குள் உலவுமோர் ஐந்தாம்படை
ஒழிப்பாய் தமிழா ஒழிப்பாய்! உடலுக்குள் உலவுமோர்.....

கடலினைப் போற்பெருந் தமிழர்கள் கூட்டத்தில்
கலகம் விளைப்பது பொறாமை அதுதான்
                        உடலுக்குள் உலவுமோர்.....

மொழியில் உயர்ந்தது தமிழ்மொழியே-பண்டு
முதல் நாகரிகரும் பழந்தமிழ் மக்களே
பழியா ஒழுக்கம் பழந்தமிழ்க் குடிமையாம்!
பகைக்கிடந் தந்ததுன் உறக்கம் அதுதான்
                        உடலுக்குள் உலவுமோர்.....

அறம்பொருள் இன்பம் எய்துதல் வாழ்க்கை
அடிமைமதம் சாதி ஏற்பதுன் தாழ்க்கை
மறத்தன்மை வழிவழி வந்தஉன் நாட்டிலே
மற்றதை மறந்தது மடமை அதுதான்.
                        உடலுக்குள் உலவுமோர்.....

இம்மைஎன்பது பகையற்ற வாழ்வே-இங்கு
மறுமை என்பது மாயாப்பெரும் புகழே
தம்மை ஆளும் வடவர்க்குன்னைத் தாழ்த்துவோர்
தம்மைவிட் டதுவேஉன் மறதி அதுதான்
                        உடலுக்குள் உலவுமோர்.....







( 145 )






( 150 )






( 155 )
இனமல்லடா அவன்

இனமல்லடா அவன்; பகைவன்-இனியும்
ஏமாறவேண்டாம் தமிழா       இனமல்லடா அவன்.....

மனம்ஒன்று செயல்ஒன்று அன்னோர்க்குக்-கெட்ட
வஞ்சக ரைக்கண்ட இடமெல்லாம் தாக்கே!
தனியாண்ட செந்தமிழ்த் தாய்க்கு-நீ
தலைவன்! நீ தலைவன் வாளினைத் தூக்கு
                        இனமல்லடா அவன்.....

அலுவல்கள் எல்லா மவர்க்கா?
அடிமையும் பிடிமையும் உனக்கா?
கோலுவிருந் திடும்நிலை நரிக்கா?
கூடியே கொஞ்சுநிலை வேங்கைப் புலிக்கா?
                        இனமல்லடா அவன்.....




( 160 )






( 165 )

சாகின்றாய் தமிழா!


சாகின்றாய் தமிழா!
சாகச்செய் வானைச் சாகச்செய் யாமல்
                           சாகின்றாய் தமிழா.....

சலுகைகள் இல்லையே என்றும்
தமிழ்அழிந் திடுதே என்றும்
அலுவல்கள் இலையே என்றும்-கெ00
அடிமையில் வாழ்வது உண்டா என்றும்
                           சாகின்றாய் தமிழா.....

அயலவன் ஆள்கின்றான் என்றும்-அதனால்
அல்லல்கள் வந்தன என்றும்
முயலுவ தறியேன் என்றும்-சிறிதும்
முறையற்ற அரசியல் வாய்ந்ததே என்றும்
                           சாகின்றாய் தமிழா...

உணவிலை உடையிலை என்றும்-நம்
உடலிடை வலிவிலை என்றும்
பிணியிடை நலிந்தேன் என்றும்-கெஞ்சிப்
பிறரிடம் அணுகுதல் பழியே என்றும்
                           சாகின்றாய் தமிழா...

புகழ்பட வாழ்பவன் தமிழன்-என்றும்
பொதுநலம் புரிவான் தமிழன்
மிகுபல்ர் கெடமுயல் வானைச்-சற்றும்
விடுவது முறையோ அடல்மிக உடையாய்
                           சாகின்றாய் தமிழா...





( 170 )






( 175 )







( 180 )

ஒழுக்கம் இலாதவர் அவர்கள்


ஒழுக்கம் இலாதவர் அவர்கள்
ஒழுக்கம் இலாதவர்
குழப்பம் விளைப்பவர் குள்ளக் கருத்தினர்
செழிக்கும் நாட்டின் ஒற்றுமை சிதைப்பவர்
                      ஒழுக்கம் இலாதவர் அவர்கள்...

ஒன்றே தெய்வம் என்றால்-ஆயிரம்
உள்ளன உள்ளன என்பார்
ஒன்றே குலமும் என்றால் உலகில்
ஒன்பதி னாயிரம் என்பார்
என்றும் உள்ளது தெய்வம் என்றால்
இறக்கும் பிறக்கும் தெய்வம் என்பார்
                      ஒழுக்கம் இலாதவர் அவர்கள்...

உருவம் இல்லாத தென்றால்-உருவம்
உண்டு பலப்பல என்பார்
ஒருபெயர் இல்லாத தென்றால்-அவர்
ஒன்பதினாயிரம் பெயர்க ளுரைப்பார்
தெருவெல்லாம் ஊரெலாம் நகரெலாம் வீட்டின்
இருளறை எல்லாம் கோயில் வேண்டுமென்பார்
                      ஒழுக்கம் இலாதவர் அவர்கள்...

எப்பற்றும் இல்லாத தென்றால்-தெய்வம்
வைப்பாட்டி வேண்டு மென்பார்
முப்பழம் உண்டிடும் என்பார்-தெய்வம்
முக்காலும் நீராடும் என்பார்
அப்பங்கள் பிட்டுகள் ஆடுமாடு கோழி
கொப்பரைக் கள்ளும் விரும்பிடும் என்பார்
                      ஒழுக்கம் இலாதவர் அவர்கள்...

பன்றி உண்ணும் தெய்வம்-மீனைப்
பழுக்க உண்ணும் தெய்வம்
ஒன்று கேட்கும் தெய்வம்-தந்தால்
ஒன்று நல்கும் தேய்வம்
கொன்ற பிள்ளைக்கறி குழம்புவேண்டும் தெய்வம்
என்ற இவைஎலாம் நன்றெனச் சொல்லுவார்
                      ஒழுக்கம் இலாதவர் அவர்கள்...

( 185 )






( 190 )






( 195 )





( 200 )





( 205 )






( 210 )
வெற்றிக்கு வழி

  வெல்லும் வகை கேளீர்-நாட்டாரே
  வெல்லும் வகை கேளீர்...
எல்லையில் கால்வைத்த பொல்லா வடக்கரை
இல்லை திராவிடம் என்ற துடுக்கரை
                      வெல்லும்வகை கேளீர்...



( 215 )
(ஒற்றிலி தாளம் இலாத்து)

பல்குழுவும்-பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
சொல் குறும்பும் இல்லாத்து நாடு
சொல்லி யருளினான் வள்ளுவன் இவ்வாறு
          தூய்மை செய்யப்பட வேண்டும் வீடு...




( 220 )

(ஒற்றுளி-தாளம் உடையது)

பல்வகைக் கட்சிகள் கூட்டிக் கூட்டிப்
பகை வளர்த்தனர் நீட்டி நீட்டி
எல்லாக் கட்சியும் ஒன்றுபட வேண்டும்
இதனை முதலிற் செய்ய வேண்டும்
          வெல்லும்வகை கேளீர்...

(ஒற்றுளி)

இராவணன் நாட்டுக்கோர் வீடணன்-போலே
இரணியண் நாட்டுக்குக் கொடிய
பிரகலாதன்போல, திராவிட நாட்டுக்குப்
பெரிதாக உள்ளதோர் ஐந்தாம் படை...

( 225 )
(ஒற்றுளி)

அடக்க வேண்டும் அவர்கள் துடுக்கை
அறுக்க வேண்டும் தேளின் கொடுக்கை
மடமை மதங்கள் சாதி அனைத்தும்
மறைந்த கதையும் மறக்க வேண்டும்
          வெல்லும்வகை கேளீர்...


( 230 )
(ஒற்றிலி)

ஆளவந்தான் ஒருதமிழன் ஆதலினால் அவனாட்சி
அழியும் வகை தேடி அலைவார்
கோளெல்லாம் மூட்டிடுவார் குற்றங்கள் சாற்றிடுவார்
கொல்லைப் புறத்து வந்தார்



( 235 )
(ஒற்றுளி)

இந்த-மூளைக்கு நல்ல அதிர்ச்சி மருத்துவம்
வேளைக்கு வேளை செய்து திருத்துவம்
வாளுக்கு யாதொரு வேலையும் இல்லை
நாளைக்குந் தீர்ந்திடும் நாம்படும் தொல்லை
வெல்லும்வகை கேளீர்...





( 240 )
தொண்டர்படை நடைத்திறம்

விடுதலைசெய் நமது நாட்டை விரைவாய்
கெடுதலை செய்யும் வடவர் ஆட்சி
பொடிபடச்செய் நட நட நட...

இரும்புப் பட்டரை அவர்க்காம்-நல்ல
எஃகுப் பட்டரை அவர்க்காம்
திரும்பும் பக்கம் எங்கும் கொழிக்கும்
செலவ மெல்லாம் அவர்க்காம் நட...    விடுதலை செய்...

சுங்கப் பொருளும் அவர்க்காம்-வண்டித்
தொடர் வருவாய் அவர்க்காம்
தங்கச் சுரங்கம் கரிச் சுரங்கம்
சுரண்டும் உரிமை அவர்க்காம் நட...     விடுதலை செய்...

ஞாலம் புகழ் விஞ்ஞானம்-தொழில்
நாம் அறிந்தவரேனும்-ஒரு
காலும் தொழிலில் நாமுன்னேற
இடங்கொடுப்பது சிறிதுமில்லை         விடுதலை செய்...

வாழ்வும் புகழும் அவர்க்காம் கெட்ட
வசையும் பசியும் நமக்காம்
தாழ்வும் தொழும்பும் நமக்காம் ஒரு
தருக்கும் செருக்கும் அவர்களுக்காம் நட...
                              விடுதலை செய்...

அருவிப் பாய்ச்சல் போலே நட
அழிவடக்கின் மேலே
தெரிவது வா'மேலை நாளைச்
செங்குட்டுவன்' வேலை யாவும்       விடுதலை செய்...






( 245 )






( 250 )






( 255 )







( 260 )