வாழு மாந்தர்க்கு வான்மழை
போன்றது
மணாளர்வந் தெனக்குத் தருவதோர் இன்பம்!
தோழியே அவரின்றி நான்படும் தொல்லை
சொல்லிக் காட்டல் இலேசில் இல்லை.
சிறுகொம்பு பெரும்பழம்
தாங்குவது போலேஎன்
சிறியஉயிர் பெருங்காதல்
தாங்குவ தாலே
மறத்தமிழன் விரைவில்
வராவிடில் உடலில்
மளுக்கென்று முறியும்என்
ஆவிமண் மேலே
பிறர்செய்த தீமையை
மறந்திடுதல், மறதி
பெறஇய லாததை
மறப்பதும், மறதி
இறந்து போவாளே
யான்போக வேண்டுமே
என்பதில் மறதியா?
அதுஎன்றன் இறுதி
|
( 5 )
( 10 )
( 15 )
( 20 ) |
இன்னும்
அன்பர் வரவில்லை
|
|
இன்னும் அன்பர்
வரவில்லை
ஏன் மறந்தார் சொன்ன சொல்லை? இன்னம் அன்பர்.....
பொன்னொளி வீசிய வெய்யில் மறைந்தது
கன்னங் கறேலென்று மாலை பிறந்தது இன்னம் அன்பர்.....
கன்று தலைதூக்கி அம்மா என்றது
கால்விரைந் தேபசு தொழுவத்திற் சென்றது
நன்மா தர்செங்கை விளக்கேந்தி நின்றது
நல்ல பறவை உறங்க முயன்றது இன்னம் அன்பர.....
வீட்டுத் தலைவர் கடை கட்டி வந்தார்
மெல்லிடை யார்வர வேற்று மகிழ்ந்தார்
நாட்டீர் விருந்துண்க என்று மொழிந்தார்
நல்லுண வுண்டபின் கண்கள் அயர்ந்தார் இன்னம் அன்பர்.....
எண்ணம் இனிக்க நடந்தான்
|
( 25 )
( 30 )
|
எண்ணம் பார்த்துக்
கொண்டிருந்தால்
|
|
எண்ணம்
இனிக்க நடந்தான் முன்னாள்!
இடர்விளைக் கின்றானே!-இந்நாள் எண்ணம்
இனிக்க.....
கண்ணுக் கினிய மலர்தந்த நெருஞ்சி-பின்( 35 )
காலைக் கொந்தும் முள்தந்த தைப்போல் எண்ணம் இனிக்க.....
பண்கொள் பொறியிறக்க வண்டி ஏறிப்
பழய நண்பர்பால் செல்வதாய்க் கூறி,
உண்மையும் தமிழ் ஒழுக்கமும் மீறி ஓடினான் பரத்தைபால் முடிச்சு மாறி எண்ணம் இனிக்க.....
எப்படியோ அவன் போகட்டும் என்றும்
இருப்பதே இல்லை எனுமனம் இன்றும்
தைப்பொங்கல் போன்ற அவன்சொல்ஒவ் வொன்றும்
தனித்தமிழ் தனித்தமிழ் இன்றும் என்றும் எண்ணம் இனிக்க..... |
( 35 )
( 40 ) |
அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தால்
|
|
அடிக்கடி
பார்த்துக்கொண் டிருந்தால்போதும்-பொட்
டன்பு செய்யா விட்டாலும் அடிக்கடி.....
பொடிவைத் தூதாமல் பொன்னில் செதுக்கிய
உருவத்தானை-முன்
படித்த செந்தமிழ் பாடியாடும் அத்தானை அடிக்கடி.....
கல்லும் உருகும் வெய்யில் காடு தாண்டிக்
கைப்பொருள் நல்வழியில் தேடவேண்டி
அல்லல்தன்னை என்உள்ளத்தில் மிகவும் தூண்டி
அகன்றான் என்னை அடைத்தான் தனிக்கூண்டில் அடிக்கடி.....
ஆளன்உருவப் படத்தில் அணைவுகள் இல்லை
ஆசைப்பேச் சொன்றும் பேசவும் இல்லை
தோளில் படர்கின்ற இப்பசுங்கொடி முல்லை
தொட்டுப் பழகிடும் கட்டாயம் எதுவும் இல்லை அடிக்கடி.....
|
(
45 )
( 50 )
( 55 ) |
வா வா இன்ப
இரவே
|
|
விவா வா
இன்ப இரவே
வருவதாய் உரைத்த அருமைக் காதலனை
விரைவிலே கூட்டி வாவா நீ வா வா இன்ப
இரவே.....
போய்வீழ்ந்ததே பொன்னான வெய்யில் மேற்கிலே
பூக்காடுபோல் கமழ்ந்தது பஞ்சணைஎன் வீட்டிலே
என்-வாழ் வானதோர் வான மீதிலே
வடுவிலாத ஒளி முழுநிலவு போன்றவனை
நொடியிலே கூட்டி வா வா நீ வா வா இன்ப
இரவே.....
பாடும் பறவைகளும் வாய் ஓய்ந்திடும் தூங்கியே!
பார்த்த கண்ணும்பூத்துப் போனதுளம் ஏங்கியே
வாடாமல் பூமாலை போ லிழுத்தே
வலியவே தழுவும் இளைய காளைதனை
நோடியிலே கூட்டி வா வா நீ வா வா இன்ப இரவே.....
வீட்டிலே விளக்கும் ஏற்றினார் நகரப் பெண்களே,
தாம்-விரும்பும் காதலர்க்கு வருந்துமே அவர்களு கண்களே
ஊட்டினார்கள் தமிழ்ப் பாட்டுப்போ லுணவையே
ஒருத்தி நான் தனித்துக் கிடப்பதென்ன முறை
நோடிக்குளே கூட்டி வாவா நீ வா வா இன்ப இரவே.....
|
( 60 )
( 65 )
( 70 )
|
மறப்பதுண்டோ?
|
|
மறப்ப துண்டோ நாதன்
நெஞ்சம்
மங்கையே ஈதென்ன வஞ்சம் மறப்பதுண்டோ.....
இறப்ப துண்டோ வஞ்சி நானும்
ஏன் பிரிந்திடும் காற்றை வானும்?
சிறக்கும் காதல் தனக்கும் ஊனம் செய்தானே மானே சற்றேனும் மறப்பதுண்டோ.....
பூணும் ஆட்சி முறையில் நினைவோ
போரை விரும்பும் தோளின் தினவோ
காணும் காட்சியின் இன்பக் கனவோ
காரணந் தான்வே றென்னவோ
பேணலும் அன்பும் போ யனவே
பெண்ணாள் வாழ்வு மண்தான் எனவோ மறப்பதுண்டோ.....
பாண்டி நாட்டை ஆளும் காளை
படை வீ டேகியே இவ் வேளை
தீண்டற் கரிய தன் உடைவாளை
தீண்டி யவிழ்த்த பின்பு நாறை
தூண்டிற் புழுப் போன்றிடும் பெண்ணாளை
தொட்டணைப்ப தென்று விட்டானோ என்தோளை
மறப்பதுண்டோ.....
தெரிவை யாளின் உயிரின் வேராய்ச்
செந்தமுழ் மன்னை வாழ்ந்தான் சீராய்
பிரிவிலாத தன் வேப்பந் தாராய்ப்
பிரிந்திட் டானே மாதே பாராய்
இரவும் பகலும் சாவொடு போராய்
இருந்தேன் இருந்தான் மதுரையே ஊராய் (மறப்பதுண்டோ.....)
|
(
75 )
( 80 )
( 85 )
( 90 )
( 95 ) |
துன்ப உலகு
|
|
வதுன்ப உலகில் துடிக்கும்நான்
அவனை
இன்ப உலகில் எப்போது காண்பேன் துன்பஉலகில்.....
வன்புசெய் கின்றான் எப்போதும் பாவி
வாடி அழியுதே என்னரும் ஆவி துன்பஉலகில்.....
தின்பதைத் தின்று தூங்குவ தென்பது
சிற்றெறும் புக்கும் முடியா தென்றால்
அன்பு செய்வதில் ஆவ-லுள்ளவளை
அணுக மாட்டேன் என்கின்றானே
துன்பஉலகில்.....
மறந்திருப் போம்என்றால் எப்படி முடியும்
மனதில் தலைகாட்டுவான் ஒவ்வொரு நொடியும்
பாறந்த நாள்முதல் பெறாதஒர் இன்பம்
பெற்றபா டில்லைஉயிர் அற்றபாடுமில்லை ! துன்பஉலகில்.....
|
( 100 )
( 105 )
( 110 )
|
படலடிப்பவன்
|
|
பாடிக்
கொண்டே ஒருவன்-பார்
படலடிக் கின்றான் தெருவில்
படலடிக் கின்றான:
நாடு நலம் பெற வே நாளுந்தன்
உடல் ஒடிக் கின் றான் ( 120 )
(அவன்) தாடி வளர்க்க வில்லை ஊர் மயக்கச்
சடை வளர்க்க வில்லை
தேடும் பொன்னம்பலவன் தொண்டனென்று
திரை விரிக்க வில்லை
கூடும் இருட்டரையில் பெண்களிடம்( 125 )
கொஞ்ச நிலைக்க வில்லை, அவர்களைக்
கெஞ்ச நினைக்க வில்லை
பாடுகள் பட்டாண்டி-நாட்டுக்கே
பயன் விளைத்தாண்டி ( பாடிக் கொண்டே ஒருவன்.....
)
தோளும் மலைபோலே அதில்முகம் ( 130 )
தோன்றும் கதிர் போலே
ஆளன் அழகனடி-அவன்என்
ஆசைக்கண் ணாளனடி
தாளுவ தில்லைஇனி-அவனிடம்
சாற்றடி என் காதல் ( 135 )
வேளை பொருத்தமடி-இப்போதென்
வீடு வரச் சொல்லடி ( பாடிக் கொண்டே ஒருவன்.....
)
|
( 120 )
( 125 )
( 130 )
( 135 )
|
|
|
நீஅத்தானே
வேண்டும்-அவன்
அனபேதான் வேண்டும்
அத்தை மகன்; என்னுளத்தைப் பறித்தஎன்
அத்தானே வேண்டும்
முத்துச் சரப்பளி பட்டுப் புடவைகள் வேண்டாம்
மூக்கும் காதும் நகை சுமக்கவும் வேண்டாம்
பத்துக் காணி நிலம் வேண்டாம்
பாலொடு நெய்தயிர் வேண்டாம்
மெத்தை வீடு வேண்டாம்
வேலைக்காரி வேண்டாம்
அத்தை வேண்டாம்
மாமன் வேண்டாம்
முத்தமிழ்
கற்ற என் அத்தானே
வேண்டும்.....
தமிழை பழித்த வடக்கை அடக்கி ஆண்ட
தக்கதோர் குட்டுவ னேவரினும் அவன் வேண்டாம்
இமைய நெற்றியில் தன்கொடி நாட்டிய
ஏந்தல் வந்துகை ஏந்தினும் வேண்டாம்
அமை திராவிட நாட்டை
ஆளவந் தானும் வேண்டாம்
சமையல் சாதிச்
சழக்கு மடமை
தாண்டினோன்
மீண்டும் என்றன் அத்தானே வேண்டும்.....
|
( 140 )
( 145 )
( 150 )
( 155 )
( 160 ) |
காதல் வாழ்விலே
|
|
காதல் வாழ்விலே மகிழ்தோம்
கவலை தவிர்ந்தோம் காதல்
வாழ்விலே.....
மாதர் என்னும் மலரும் இளைய
மைந்தர் என்னும் வண்டும் கலந்த காதல் வாழ்விலே.....
தென்றல் காற்றும் வானும்
சேரன் தமிழும் பொருளும்
அன்றில் ஆணும் பெண்ணும்
அணைவதான இணையிலாத காதல் வாழ்விலே.....
இளமை இரண்டும்! அழகே
இரண்டும், நெஞ்சம் இரண்டும்
அளவளாவும் போதில் பொழியும்
அமிழ்த மழையில் நனைவ தான் காதல் வாழ்விலே.....
அலையில் நீந்தி ஓடும்
அன்னம் போன்ற ஓடம்
நிலைஉயர்த்தி நம்மைக் கூட்டி
நினைவைஎல்லாம் இன்பம் ஆக்கும் காதல் வாழ்விலே.....
விரிந்த வானும் ஒளியும்
வீணையும் நல் இசையும்
புரிந்தின்பம் போல நாமே
பூரிப்பாலே வாரிது தழுவும் காதல் வாழ்விலே.....
|
( 165 )
( 170 )
( 175 )
( 180 ) |
அவன்தான் குழந்தையைச்
சுமப்பான்
|
|
அவன்தான்
குழந்தையைத் தூக்கிச் செல்வான்
அவனும் குழந்தையின் அன்னையாம்
அவளும் சேர்ந்து வழி நடக்கையில் அவன்தான்.....
எவன்தான் மனைவியான மடமாள்-ஓர்
இன்னல் அடைய விடுவான்?
அவன்தன் மேலாடை காத்து-விழிமீன்
அன்பன்மேல் சேர்த்து நடந்து செல்வாள் அவன்தான்.....
அறம்நடத்தி இனபம் நல்கும் அமிழ்து-தன்
அல்லல் தீர்தல்எப் பொழுது?
புறமுள்ள சோலைக்குமாலை செல்வாள்-தனது
பொன்னான கண்ணாளன் தன்னுடன் இனிதே
அவன்தான்.....
|
( 185 )
( 190 )
|