பக்கம் எண் :

(தேனருவி I)

துயருற்ற மகளிர்
சூடாத மலரானேன்
சூடாத மல ரானேன்
தோயாத புன லானேன், நான்        சூடாத மல ரானேன்.....

ஆடாத அரங் கானேன்
அன்பில்லை என்ப தனால்          சூடாத மல ரானேன்.....

தமிழற்ற நா டானேன்
தலையற்ற உட லானேன்
கமழ்வற்ற பொழி லானேன்
காதலனில் லாததினால்              சூடாத மல ரானேன்.....

மிழற்றாத யா ழானேன்
வேண்டாத குழ லானேன்
அழைக்காத விருந் தானேன்
அழகனில்லை ஆதலினால்           சூடாத மல ரானேன்.....

மழைபெற்ற பயிர் போலே
மதிபெற்ற வான் போலே
அழகுற்று வாழ் வேனோ
அவன்நல்கும் இன்பமுற்று            சூடாத மல ரானேன்.....






( 5 )





( 10 )





( 15 )

துன்புற்ற மகளிர்
காதலர்க்கு நான் வேம்பானேன்
காண அஞ்சுமோர் பாம்பானேன்-நான்
தீதுசிறிதும் செய்தறியேன் இன்று
தீராப்பழியை நான்சுமந்தேன்

அன்பு வாழ்வை மறந்தாரே-
அறத்தின் மேன்மை இகழ்ந்தாரே-இந்தத்
துன்ப வாழ்க்கை எனக்கேனோ-என்
துனைவரை இனி அடைவேனோ

ஒட்டிக் கிடந்த இரண்டுள்ளத்தை
வெட்டிப் பிரிக்கவும் செய்தாரே...நல்ல
கட்டிக் கரும்பைக் கசந்தாரே-என்னைக்
கைவிட்டுப் போகவும் இசைந்தாரே.




( 20 )






( 25 )

துன்புற்ற மகளிர

பெற்ற மகனுக்குப் பெண்டாட்டி நான்-என்றும்
அத்தை கருதவே இல்லை-அன்றோ
ஆதலினால் இந்தத் தொல்லை

குற்றம் ஒன்றுமே செய்யாத போதும்
கூந்தலைப் பற்றி இழுத்தார்-அத்தை
குப்புறத் தள்ளி மிதித்தார்

அத்தையின் தொல்லை நான் பொறுத்தாலும்
அவரும் பொறுக்கவா முடியும்-அதை
எண்ணினால் என்நெஞ்சம் ஒடியும்

முத்தம் கொடுக்க அத்தான் எனைத் தாவும்
முகத்திற் புண்கண்டு துடிக்கும்-அத்தை
அடித்தார் என்றால் என்ன நடக்கும்.


( 30 )







( 35 )





( 40 )

             
துணைபிரிந்த பெண்ணாள்


அமீளா விடைபெற்று
விட்டு மறைந்தீரோ            அத்தானே

ஆளான நாள்முதல்
அன்பு மறவாத           அத்தானே

தோளோடு நீங்காத
தோளும் பிரிந்ததோ           அத்தானே

கேளாத செந்தமிழ்
கேட்பதும் போனதோ          அத்தானே

ஆனலும் பாடலும்
ஆழப் புதைந்தவோ           அத்தானே

ஊடலும் புணர்தலும்
ஓடி மறைந்தவோ             அத்தானே

தேடாத செல்வம்
எனக்கென்று நம்பினேன்        அத்தானே

வீடு குலையவே
விளக்கும் அவிவதோ          அத்தானே








( 45 )







( 50 )







( 55 )
ஆளனில்லாத வேளையில்
விஆளனி ல்லாத வேளையில் வந்தீர்
அடுக்காத சொல் அடுக்கு கின்றீர்
தாள முடியுமா சொல்வீர் நீவீர்
சற்றே வெளியில் செல்வீர்
                        ஆளனில்லாத.....

தேளாய்க் கடுக்கும் சொல்லையும் சொன்னீர்
செந்தமிழ்க்கே அதனால் கெட்ட பேர்
மாளநேர்ந் தாலும்என் கற்புத்-துளி
மாறிடும் என்பது மிகவும் தப்பு
                        ஆளனில்லாத.....

சமயம் சாய்ந்தன சாதி மறைந்தன
சாயா மடமைகள் சாந்ந்தன ஆயினும்
அமையும் மாதர்க்குத் தொல்லை கொடுத்திடும்
ஆடவர் மட்டும் ஒழிய வில்லையே!
                        ஆளனில்லாத.....

தமிழப் பெண்களின் படைஒன்று வேண்டும்
தக்கைகள் உள்ளத்தைத் திருத்த வேண்டும்
உமியல்ல மாதர் வலக்கை-தீயர்
உயிரை இடிக்கும் உலக்கை-ஐயா!
                        ஆளனில்லாத.....





( 60 )







( 65 )






( 70 )

இறந்தார் கணவர்

இறந்தார் கணவர் அன்றைக்கே நீயும்
இறந்தாய் மகளே இறந்தாயே

பிறந்திருக் கின்றாய் மீண்டுமிந் நாட்டில்
பிறந்திருக் கின்றான் அவனுமோர் வீட்டில்

மணம் செயது கொள்வதில் வெறுப் பென்ன? இங்கு
வாழ்வாங்கு வாழ மறுப்பென்ன?

குணமொன்று பொருளுள்ளமட்டும் இருப்பது போல
மணம்தன் உயிருள்ள மட்டும் இருந்தாக வேண்டும்

மறுமணம் புரிவதால் வராதொரு கேடும்
மறுமணமிலாத பெண் கெடுவது கூடும்

குறைபாட்டைத் திரைபோட்டு மறைத்திட வேண்டாம்
கூறினேன் நீ இதை எண்ணிட வேண்டும்.



( 75 )






( 80 )