வாழ்த்தாத
நாளில்லை வையகம்
மறைமலை அடிகள் மறவாத் திருப்பெயர்
வாழ்த்தாத
நாளில்லை வையகம்.....
ஆழ்ந்து கடலில் முத்தெடுப் பார்போல்
அகன்ற உலகு இலக்கியம் அனைத்திலும்
வீழ்ந்து பொருளுண்மை விளக்கும் ஆற்றலால்
வெல்ல முடியாத நல்லாசிரியனை
வாழ்த்தாத
நாளில்லை வையகம்.....
தென்னாடு சார்ந்த குமரிப் பெருநிலம்
திரைகடல் மறைத்த உண்மைச் செய்திக்குப்
பொன்னேடு காட்டும் புலவர்க்குப் புலவனைப்
பொழுதெலாம் தமிழுக் குழைத்த தலைவனை
வாழ்த்தாத
நாளில்லை வையகம்.....
மறையெனப் படுவது தமிழ்நான் மறைநூல்
மற்ற மறைநூல் பின்வந்த குறைநூல்
முறையாய் இவைகட்குச் சான்றுகாட்டி
முழக்கஞ்செய்த முத்தமிழ் அறிஞனை
வாழ்த்தாத
நாளில்லை வையகம்.....
ஆரியச் சொற்கள் இந்நாட்டில் உற்றதும்,
அத்தமிழ்ச் சொற்களின் உதவி பெற்றதும்
வாரியணண் ஆயாய்ந்த உண்மையை
வழங்கிய திருக்கை சிவந்த வள்ளலை
வாழ்த்தாத
நாளில்லை வையகம்..... |
( 5 )
( 10 )
( 15 )
|
தேனருவி திரு.வி.க
|
|
தேனருவி திரு.வி.க
செந்தமிழ்ப் பேசும் எழுதும் இன்பத் தேனருவி திரு.வி.க.....
கானல் நடுவில் மலர்ச் சோலையாகக்
காத்தார் தமிழ்மணம் காணாத நாளில்
கூனிக் கிடந்த தமிழர் விழிக்க
வானுயர் திறந்தால் வழங்கும் அனைத்தும்
தேனருவி திரு.வி.க.....
தெளியார்க் கொன்றை ஒளிமறை வின்றித்
தெளிவு படுத்தும் அவர்க்குள்ள திறமை
துவியே னும்பிறர்க் கிருந்ததில்லை
இருக்கப் போவதும் இல்லை தித்திக்கும்
தேனருவி
திரு.வி.க.....
சமையம் இட்டுச் சாத்திய இயற்கையின்
அமைவையும் அழகையும் ஆர வுண்டு
நமையும் உண் ணீர்என நல்கும் தமிழ்நடை
அமிழ்தன்று கனிபிழி ஆறன்று முத்தமிழ்த்
தேனருவி
திரு.வி.க.....
வள்ளி முருகன் வாழ்க்கைக் கதையினைத்
தள்ளி எழிற்குன்றம் மாலைவா னொளியின்
வேள்ள நீராடும் வேடிக்கை கண்டே
உள்ளம் பூரித்து முருகென் றுரைத்தது
தேனருவி
திரு.வி.க.....
பெண்ணின் பெருமையைத் தொழிலாளி உரிமையைக்
கண்ணான தமிழின் கவினார்ந்த உண்மையைப்
புண்ணான இந்தி புகுத்தும் சிறுமையை
எண்ணிய எண்ணத்தில் எழுந்த தமிழனைத்தும்
தேனருவி
திரு.வி.க.....
|
( 20 )
( 25 )
( 30 )
( 35 )
( 40 ) |
பகை நடுங்கச்
செய்த பாரதி
|
|
பகைநடுங்கச்
செய்த பாரதி பாட்டை நீ
பாராட்டு மறவனே
நகைக்கத்தக்க நால்வகைச் சாதியாம்
நச்சுப் பாம்பை நசுக்கிடச் சொன்னால்
மிகுத்திட வேண்டும் மனுக்கொள்கை என்று
வீறாப்புப் பேசி வெளிவரும் பகை நடுங்கச் செய்த பாரதி
பார்ப்பான் உயர்வென்றும் பாட்டாளி தாழ்வென்றும்
ஏற்பாடு செய்த நூல் இழிந்தநூல் என்றால்
கூப்பாடு போட்டு நாட்டினை ஆயிரம்
கூறாக்கித் தாம்வாழ எண்ணிடும் அந்தப்
அனைவரும் சரிநிகர் அனைவர்க்கும் எல்லாம்
அறுத் தெறியுங்கள் பூணூலை என்றால்
தனி ஒருகூட்டம் ஏமாற்றி வாழச்
சாத்திரச் சழக்குக் காட்டிடும் அந்தப்
பகை நடுங்கச் செய்த பாரதி.....
நாட்டுக்கு மறவரை நல்கும் அன்னைமார்
நைய விடுவது நல்லதா என்றால்
கூட்டிற் பறவைபோல் உரிமை இழப்பதும்
குற்றமில்லை என்றார்கள் அந்தப்
பகை நடுங்கச் செய்த பாரதி.....
பண்டைய தமிழ்நடை இன்றைக்கு வேண்டாம்
பலர்க்கும் புரியப் பாடுங்கள் என்றால்
நொண்டி நடக்கும் பண்டிதர் நடைதான்
நூலுக்கு வேண்டும் என்றார்கள் அந்தப்
பகை நடுங்கச் செய்த பாரதி.....
|
( 45 )
( 50 )
( 55 )
( 60 )
|
நாட்டுக்குத் தொண்டு
|
|
நாட்டுக்குத்
தொண்டு
நமக்கு மகிழ்ச்சி
நடக்கட்டும் போர் என்றான்
வாழ்க சிதம்பரன் பேர்
கேட்டுக்கும் வெள்ளையர் நீட்டுக்கும் துப்பாக்கி
வேட்டுக்கும் வெஞ்சிறை வீட்டுக்கும் அஞ்சாமல்
நாட்டுக்குத்
தொண்டு.....
வீட்டுக்கு வீடு விளக்கேற்றினான் எங்கும்
விடுதலை உணர்ச்சி உண்டாக்கினான்
கூட்டுத் தொழில்களும் ஆக்க வேலைகளும்
குற்றமென்று சொன்ன கொடியர்க்கும் அஞ்சாமல்
நாட்டுக்குத்
தொண்டு.....
தண்டா விளைச்சல்கள் தங்கச் சுரங்கங்கள்
அண்டும் பெருநாடே எங்கள் உடைமை என்று
தண்டோராப் போட்ட தமிழனவனையே
தாழ்த்த முயன்ற தக்கைகட்கு அஞ்சாமல்
நாட்டுக்குத்
தொண்டு.....
ஒப்போம் அயல்நாட் டுடைமைகள் என்றான்
உரிமை எவற்றிலும் எமக் கென்று சொன்னான்
கப்பல் கட்டி ஓட்டினான் வெள்ளையர்
செக்கிழுக்க வைத்தார் அந்தக் கேட்டிலும்
நாட்டுக்குத்
தொண்டு.....
|
( 65 )
( 70 )
( 75 )
( 80 ) |
பரிதிமால் கலைஞன்
|
|
இந்தநூற் றாண்டில் இருவர் பார்ப்பனர்
செந்தமிழ்ப் பற்றுடை யார்கள்
இந்த
நூற்றாண்டில்.....
முந்த பாவலன் பாரதி, மற்றவன்
முத்தமிழ் வல்லவன் பரிதிமாற் கலைஞன்
இந்த
நூற்றாண்டில்.....
நாடகத் தமிழ் இலக்கணம் மறைந்ததே
நாடகத் தமிழ் இலக்கியம் மறைந்ததே
ஈடுசெய் வேனோ என்று துடித்தான்
இயன்ற மட்டும் சிற்சில கொடுத்தான்
இந்த
நூற்றாண்டில்.....
சூரியநா ராயண சாத்திரி என்ற
தூய்மை யற்றதன் ஆரியப் பெயரை
ஏர்பெறு தமிழாற் பரிதிமாற் கலைஞன்
என்று மாற்றிய நற்றமிழ் அறிஞன்
இந்த
நூற்றாண்டில்.....
வாழிய பரிதிமாற் கலைஞன் எனும்பெயர்
வாழிய அன்னோன் வாரிய பெரும்புகழ்
ஊழியபெ யரினும் தன்சீர் பெயரா
உயர்தனிச் செந்தமிழ் அன்னைவா ழியவே!
இந்த
நூற்றாண்டில்.....
|
( 85 )
( 90 )
( 95 ) |
மனோன்மணீயம்
சுந்தரனார்
ஒன்று சொன்னாள் தமிழன்னை-என்னிடம்
ஒன்று சொன்னாள் தமிழன்னை
அன்றொருநாள் மாலைப் போதினிலே
ஆரும் அறியாமல் என் காதினிலே
ஒன்று
சொன்னாள்..... மன்றப் புலவரில் கைகாரன்-தமிழ்
மனோன்ம ணியம்செய்த சுந்தரன்
பன்றிகள் உறுமின ஆரியம் உளதென்று
பளீரென்று சுந்தரன் செத்த தென்றான்-இந்த
ஒன்று
சொன்னாள்.....
நான் பெற்ற மக்களில் சுந்தரன் சிறந்தவன்
நற்றமிழ் காக்கத் தன்னலம் துறந்தவன்
தேன்போன்ற தமிழை வளர்க்கப் பிறந்தவன்
செந்தமிழ்க் குழைத்தே இறந்தவன்-இந்த
ஒன்று
சொன்னாள்.....
|
( 100 )
( 105 ) |
ஆர்.கே. சண்முகன்
|
|
நீதித்துறை
அறிஞன் ஆர்கே சண்முகன்
நீணிலத் தலைவரில் ஒருவன்
நீதித்துறை
அறிஞன்.....
மதித்திடும் வண்ணம் தமிழ்த்தொண்டு செய்தோன்
மதியா ஆரியர் வாலினைக் கொய்தோன்
நீதித்துறை
அறிஞன்.....
வையக் கணக்கர்பால் தம்கணக் குரைப்பான்
கையொலி செய்வார் வையக் கணக்கர்
செய்வன திருந்தச் செய்எனும் அறம்தெரிந்தோன்
தீந்தமிழ் நாட்டுக்கே அன்பு புரிந்தோன்...
நீதித்துறை
அறிஞன்.....
கல்விப் பொருளும் செல்வப் பொருளும்
கடலெனப் பெற்றோன் உடலும் உயிரும்
எல்லார்க்கும் பயன்பட இனிதில் உழைத்தோன்
என்றும் வாழ்க அவன்புக ழுடம்பே
நீதித்துறை
அறிஞன்.....
|
( 110 )
( 115 )
( 120 ) |
பா. வே. மாணிக்க
நாயக்கர்
|
|
ஒளியின் முதன்மை
செங்கதிர் அதுபோல்
ஒழுக்க முதன்மை தமிழகம் என்றே
தெளிவித் தோன்பா வே மாணிக்க நாயக்கன்
அன்னவன் பேர்வாழ்க இந்நி வத்தே!
வரைவின் துறையில் அலுவல் வல்லான்
வள்ளுவன் நிகர்த்த கல்வி வல்லான்
புரையிலா அவைப் பெருஞ் சொல்லான்
பொய்யர்க்கு அஞ்சுதல் சிறிதும் இல்லான்
ஒளியின்
முதன்மை.....
ஒளிவடி வினுக்கிம் வரிவடி வினுக்கும்
ஒம்எனும் தமிழ்எழுத் தேமுதல் என்று
வலிவுற வீளக்க நூல்பல செய்தான்
மாணிக்க நாயக்கன் மாப்புகழ் ஒங்கவே
ஒளியின்
முதன்மை.....
|
( 125 )
( 130 ) |
இசைப்புலவன் இலக்குமணன்
|
|
இயலிசை
வல்ல இலக்கு மணனை
இனியத மிழகம் இழந்து வருந் துங்கால்
அயலுள பார்ப்பனர் அகமகிழ்ந் தார்கள்
ஆதலாற் பகைவரைக் கான்றுமிழ்ந்துநீ
முதறிவாளர்க்குக் கல்நாட்டு தமிழா!
பாழுங் கிணற்றில் பதுக்கிய தமிழிசை
மீளும் வகையை மேற்கொண்ட அறிஞன்
வாழ்விழந் தானென்று மகிழ்ந்தார் பார்ப்பனர்
கோழைப் பகைவரைக் கான்றுமிழ்ந் தேநீ
ஏழிசை வல்லார்க்கே கல்நாட்டு தமிழா!
|
( 135 )
( 140 )
|
|
|
அழகிரி
பெரும்புகழ் வாழ்க! பகுத்
தறிவின் மணிவிளக் காகத் திகழ்ந்த
அழகிரி பெரும்புகழ் வாழ்க!( 145 )
வழிவிட்டு விலகுக மடமைகளே, எமை
வாழவிட்டு வெளியேறு பார்ப்பானே
வழிவிட்டு மறைகசிறு தெய்வங்களே
வெற்றுவேட் டினிவேண் டாம்என்ற
அழகிரி பெரும்புகழ் வாழ்க!( 150 )
திராவிட நாடு திராவிடர்க் காகுக
ஆரிபர் நாட்டில் ஆரியர் வாழ்க
ஒரே நாடுதான் இருநாடும் என்றே
ஒட்டாரம் பேசினால் கெட்டுப்போ வீர்என்ற
அழகிரி பெரும்புகழ் வாழ்க! |
( 145 )
( 150 )
( 155 ) |
தியாக ராசன்
|
|
தியாக ராசனால்
திராவிடம் விழித்தது
தீயவர் அஞ்சினர் கொட்டடா முரசம்
உய்யாத தமிழர்கள் உய்ந்திட லானார்
ஒடுக்கினர் ஆரியர் கொட்டடா முரசம்
அவிந்த உளத்தில் உணர்வு கொளுத்தினான்
ஆரியம் வெளுத்தது கொட்டடா முரசம்
கவிழ்ந்தகேடயம் இடக்கையில் ஏறிடக்
கத்தி நிமிர்ந்தது கொட்டடா முரசம்
தீயகாங் கிரசை அன்றே சிரித்தான்
தியாக ராசன் கொட்டடா முரசம்
தூயகாங் கிரசென அன்று புகழ்ந்தவர்
துப்பினர் இன்று கொட்டடா முரசம்
தமிழர் இயல்பின் தகுதி காட்டி
அமிழ்தை ஊட்டினான் கொட்டடா முரசம்
நமதடா இத் திராவிடம் என்று
நன்றுசொன் னானென்று கொட்டடா முரசம்
மாப்பெருந் திராவிட இயக்கா யிரக்கால்
மண்டபம் கண்டோம் கொட்டடா முரசம்
காப்புள இந்தக் கட்டடம் தனக்குக்
கடைக்கால் அவனென்று கொட்டடா முரசம்
பெரும்புகழ் நாட்டிப் பருவுடல் மறைந்தான்
பெரிதும் வாழ்த்திக் கொட்டடா முரசம்
அரும்புகழ் இளையர் வீரச் சிரிப்பினில்
அவனைக் கண்டோமென்று கொட்டடா முரசம்!
|
( 160 )
( 165 )
( 170 )
( 175 ) |
சவுந்திர பாண்டியன்
|
|
பாண்டியன்
பேர் வாழ்கவே-சவுந்திர
பாண்டியன் பேர் வாழ்கவே
வேண்டிய செல்வம் அணுகிடும் போதும்
விலகிய செல்வம் விலகும் போதும்
மாண்டிடத் தக்க நோய் வந்த போதும்
மட்டிலா உடல்நலம் வளர்ந்த போதும்
யாண்டும்எப் போதும்சுய மரியாதை இயக்கும் பேணத் தயக்கம் கொள்ளாப்
பாண்டியன் பேர் வாழ்கவே...
கயவர் கத்தி உருவும் போதும்
கற்றவர் புகழ்ந்து பேசும் போதும்
அயலவர் சூச்சி வலுத்திடும் போதும்
ஆரியர் வணங்கி அழைத்திட்ட போதும்
இயலும்முப் போதும் சுய மரியாதை
இயக்கும் பேணத் தயக்கம் கொள்ளாப்
பாண்டியன் பேர் வாழ்கவே...
தோழர்கள் எல்லாம் தொகை வேண்டும போதும்
தொகைபெற்ற தோழர் பகைகாட்டும் போதும்
தாழ்வுறத் தலைமேல் தூக்கிடும் போதும்
ஏழ்மையை வெருட்டும் சுய மரியாதை
இயக்கும் பேணத் தயக்கம் கொள்ளாப்
பாண்டியன் பேர் வாழ்கவே...
|
(
180 )
( 185 )
( 190 )
( 195 )
( 200 ) |
பாண்டித்துரைத்
தேவன்
|
|
இனியுமோர்
தமிழ்ச் சங்கம் காண்பேன்
இருந்த முதலிடை கடைச் சங்கம் போலவே
எனக்கொன்ன பாண்டித் துரைத்தேவன் சொல்லை
இவ்வையம் அந்நாளில் நம்பவே இல்லை
இனியுமோர் தமிழ்ச்சங்கம்.....
வியந்தது வையம் சென்றநாள் சிலவே
விரிந்தது மதுரைத் தமிழ்ச்சங்க நிலவே
அயர்ந்த தமிழரின் ஆடலும் பாடலும்
அறிவின் செயலும் மிளிர்ந்தன பலவே
இனியுமோர்தமிழ்ச்சங்கம்.....
புலவர் வகுப்பு மூன்று படைத்தான்
புன்மையின் மடமையின் என்பை உடைத்தான்
பலதமிழிலக்கிய மாசு துடைத்தான்
பாண்டித் துரைத்தேவன் புகழ்கொடி எடுத்தான்
இனியுமோர்தமிழ்ச்சங்கம்.....
|
( 205 )
( 210 )
|
உமாமகேச்சுரன்
| |
வான விரிவைக்
காணும்போ தெல்லாம்-உமா
மகேச்சுவரன் புகழென் நினைவில் வரும்
வான விரிவைக்காணும்.....
ஆனதமிக்கல் லூரி நிறுவினோன்-மக்கள்
அன்பினோன்; அறத்தினோன்; ஆன்ற அறிவினோன்
வான விரிவைக்காணும்.....
பெற்ற அன்னையை அன்னாய் என்றுவாய்
பெருக அழைக்கவும் நேரமே யில்லை
உற்றார் உறவினர்க் காக உழைக்க
ஒருநாள் ஒருநொடி இருந்ததே இல்லை
'கற்றவர் தமிழர்' என்னுமோர் உயர்நிலை
காண வேண்டி இல்லந் துறந்து
முற்றுங் காலத்தைத் தமிழ்த்தொண் டாக்கினோன்
வாழ்க! தமிழ் முனிவன் திருப்பெயர்
வான விரிவைக்காணும்.....
|
( 215 )
( 220 )
( 225 ) |
பன்னீர்ச்செல்வன்
|
|
ஆரியம்
என்ற குறைகொள்ளிப் பிணமும்
அற்றிருக்கும் அவன் இற்றைநாளிருந்தால்
ஆரியம்
என்ற.....
போரிலே தமிழர்க்குப் பன்னீர்ச் செல்வன்
பொதுப்படைத் தலைவன் எதற்கும் அஞ்சாதவன்
ஆரியம்
என்ற.....
திராவிடத் தினில் திராவிட மொழியல்லால்
எந்த மொழியும் தான்ஒரு காலை
எடுத்து வைத்திடில் உரிப்பேன் தோலை
வராதே இந்தியே என்றுதன் போர்
வாளெடுத்த பன்னீர்ச் செல்வன்பேர் வாழ்க
ஆரியம்
என்ற.....
அழுதுகொண் டிருந்த நம்தமி ழன்னை
சிரித்தாள் என்றால் அவன்திறம் கண்டதால்!
தொழுது பிறரடி தொடர்ந்த தமிழர்கள்
தூய உணர்வு கொண்டிடச் செய்தவன்
பழந்தமிழ்ப் பன்னீர்ச் செல்வன்பேர் வாழ்க!
ஆரியம்
என்ற.....
|
|
|
அமைச்சன் முத்தைய
அமைச்சன் முத்தையப் பேர் வாழ்க-அந்நாள்
அவன் காட்டியவழி மீள்கவே
தமிழரின் காப்பாளன் நலவழக்கறிஞன்
தன்னலம் கருதாத் தனமைநன் அந்த
அமைச்சன் முத்தையப் பேர்.....
தமிழர்தம் உடைமை இத்தமிழ் நாடு!
தமிழர்க் குரிவை தமிழ்நிலை நலங்கள்!
சுமக்காத மாட்டுக்கு செல்வத்தில் பங்கா?
என்று சொன்னவன் முத்தையன் அந்த
அமைச்சன் முத்தையப் பேர்.....
'அதிகாரி கால்நக்கும் பார்ப்பனர் தமக்கே
அலுவல்கள்' என்ற நிலைமையைப் போக்கிச்
சதுர்கொண்ட தமிழர் விழுக்காடு நோக்கும்
சட்டத்தைச் செய்தான் முத்தையன் அந்த
அமைச்சன் முத்தையப் பேர்..... |
(
240 )
( 245 )
( 250 )
|