நீ ஏன் வீணான பாதையில் சென்றாய்?
என்னெஞ்சே உலகில்
நீ
ஏன் வீணான பாதையில்.....
ஓயாக் கலகமெலாம் உற நலிந்தாய்
சீராதல் எந்நாள்?
நீ
ஏன் வீணான பாதையில்.....
வீழாதே மதமெனும் ஒரு தீமைமிகு பாழ்குழியில்
போய்த் தீரவேண்டும் சாதி எனுமொரு
பொல்லாத நோய்! அறநெறியி லேநட
நீ
ஏன் வீணான பாதையில்.....
நீ ஏன் கோயில் உருவந் தொழுதாய்?
நீ ஏன் உனதறி வினை இழந்தாய்?
நீ ஏன் குறள் சொன்னதை மறந்தாய்?
நீ வாழ வேண்டு மெனில் இதைக்கேள்;
தீயும் நீரும் நிலமும் வெளியும் காற்றும்
கலகக் கோயில் உருவம் கடவுளல்ல
உணர்வு தான்கடவு ளென்று நாளும்
வாழ்த்து வாய் மனமே வாழ்த்து வாய்!
நீ
ஏன் வீணான பாதையில்.....
அறிவு
கெட்டவன்
அறிவு கெட்டவன் பணம் படைத்தால்
அணுக் குண்டு செய்வான்-நல்ல
நெறி யுணர்ந்தவன் பணம் படைத்தால்
பொதுத் தொண்டு செய்வான் !
குறி கெட்டவன் பணம் படைத்தால்
கொடும் படை சேர்ப்பான்-நல்ல
நிறை மனத்தவன் பணம் படைத்தால்
படுந் துயர் தீர்ப்பான்
கன்மனத்தான் பணம் படைத்தால்
கல கத்தைச் சேர்ப்பான்-மிக
நன் மனத்தான் பணம் படைத்தால்
உல கத்தைக் காப்பான்
தன்மை கெட்டவன் பணம் படைத்தால்
சாதியை நயப்பான்-நல்ல
பொன் மனத்தான் பணம் படைத்தால்
நீதியை மதிப்பான்
முன்னனி மறவன் நீ
முன்னணி மறவன் நீ !
முன்அணி
மறவன் நீ
எந்நாளும்
வாழ்க!
நன்கு கூடினார் திராவிட நாட்டினர்
நண்ணினார்கள் தோழர்கள் வீட்டினர்
பன்னு முனக்குப் பிறந்தநாள் வாழ்த்துப்
பாடினார் அன்பினைச் சேர்த்து
ஆசை நீக்கச் சிறந்திட வேண்டும் நீ
ஊர்சிரிக்கும் ஐந்தாம்படைத் தொல்லை
ஒழியு மட்டும் முன்னேற்றம் இல்லை
முன்னணி
மறவன் நீ
வந்த வடமொழி தமிழுக்குத் தாயாம்-நம்
வாழ்வின் சீர்த்தி வடவரால் வந்ததாம்
இந்தச்சொல் சொன்ன தெந்தக் கலவடை! எனில்
இங்கிருக்கும் அதேஐந் தாம்படை
ஒன்று பட்டனர் திராவிடர் இந்நாள்
உணர்ந்து போற்ற வேண்டிய நன்னாள்
இன்று சிற்சில தந்நல மிக்க
ஏடுகள் செயு மிடையூறு திருத்தும்
முன்னணி
மறவன் நீ
ஆண்டதமி.ர் தாம் கொண்ட தூக்கம்
ஆரியர்க் கெலாம் நல்லதோர் ஆக்கம்
வேண்டிச் செந்தமிழ் வேரிற்கை வைத்தார்
விளங்கு தமிழ்நூல் உலையிற் பொய் வைத்தார்
கன்னல் நாட்டைக் கசப்பாக்கும் இந்திக்
கால்கள் வெட்டப்பட வேண்டும் முந்தி
இன ஒழுக்கம் இன்கலை தாய்மொழி
எண்ணி டார்க்குக் காட்டடா நல்வழி
முன்னனி
மறவன் நீ
பிறந்தநாள்
இந்நாள்
பிறந்த நாள் இந்நாள்-பேறெலாம்
பெற்று நீ வாழ்க-பன்னாள்
(பிறந்த
நாள்)
சிறந்த நாட்கள் ஆயின சென்ற நாளெல்லாம்
செந்தமிழ்த் தொண்டுநாள் ஆகட்டும் இனியெலாம்-நீ
(பிறந்த
நாள்)
பட்டிலோர் பாவாடை
கட்டிக் கொண் டாயா? நன்று
பால்நுரை போற்சட்டை
இட்டுக் கொண் டாயா? நன்று
ஒட்டுமாம் பழமிதே ஆப்பிள் ஆரஞ்சி
பிட்டுமாப் பண்ணியம் உண்ணுவாய் கொஞ்சி-நீ
(பிறந்த
நாள்)
அனைவரும் இங்கே உனைஒன்றே ஒன்று
பாடொன்றார் இலையா? ஆமாம்
கனிஒன்று தோலுரித்துச் சுளையோடு
கன்னல் கலந்ததாய்ப் பாடம்மா பாடு! நீ
(பிறந்த
நாள்)
பெரிய பெண்ணானால் ஆடவா சொல்வார் ஃஊ ஃஊம்
அரிய தமிழ்ப் பாடி ஆடவேண்டாமா? ஆமாம்
திருவோங்கு செந்தமிழ்ப் பாண்டியன் பாட்டுச்
செப்பிய வண்ணமே ஆடிக் காட்டு நீ
(பிறந்த
நாள்)
அன்பு
வாழ்வு கொண்ட நீவிர்
தந்ததான தந்ததான
தந்ததான தந்ததான தனதான
அன்பு வாழ்வு கொண்டநீவிர்
இன்பம் ஆர உண்டு வாழ்க! தமிழ்வாழ
அஞ்சிடாது தொண்டு சார்க!
அண்டுதாழ்வ கன்றுபோக முனைவீர்கள்
முன்பு வாழ்வு யர்ந்தநாடு
முன்பு தீமை வென்றநாடு தமிழ்நாடு
முன்புஞால மெங்குமேகி
வங்கவாணி கஞ்செய்நாடு பழதாடு
எனபுதோலு லர்ந்து வாடி
இன்றுநாடி ருந்தவாறு மறவாதிர்
இந்திநோய் கொணர்ந்திடாது
வன்புகாரர் அண்டிடாத வகைஆய்க
இன்றுபோன்ம கிழ்ந்துபாரில்
என்றுநீவிர் நன்றுவாழ்க புகழ்மேவி
இன்பமேஇ யைந்தவாழ்வில்
எஞ்சிடாது வந்துவாழ்க தமிழ்நாடே !
|
( 5 )
( 10 )
( 15 )
( 20 )
( 25 )
( 30 )
( 35 )
( 40 )
( 45 )
( 50 )
( 55 )
( 60 )
( 65 )
( 70 )
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
( 100 )
( 105 )
( 110 )
|