பக்கம் எண் :

102கவிமணியின் கவிதைகள்

Untitled Document
வேறு

635 துன்றுமிருள் சாயும் சுடரொளியும் வானேறும்
மன்றவரவிந் தமிது வாயவிழும் - என்று சுரம்
பந்தண் மலரினக முறைய அச் சுனையை
வந்துண்டு மாய்த்ததொரு மா.

வேறு

636 மாலையிருள கலும் கதிரவன்
     வானிலுதித் தெழுவன்
கோல மலரிதுவும் மகிழ்ந்து
     குலாவி யலர்ந்திடுமே
வாவிமலர் விரிய எனக்குமிவ்
     வன்சிறை நீங்கி விடும்
பூவுலகெங்குமுள்ள மதுவனம்
     போயுலாவித் திரிவேன்
என்றொரு தாமரைக்குள் மதுகரம்
     எண்ணி யிருந்திடவே
சென்ற மதவேழம் சுனையதுவே
     தீயச் சிதைத்ததுவே.

சமூகம் (7)

86. பலியின் கொடுமை

637 நாடியறம் தேடியிடும் நற்தேரூரில் தன்னிலமர்
நல்ல மாடனென்றும் மறவ னென்றும்
கோடி பழிசெய்த பெருங்கௌலநல் வேதம்
கூறிய தெனவே தெளிந்து கண்டு
ஆடினார் ஆடறுத்தார் அள்ளி யுண்டார்
ஐயயோ பாரில் இக்கொடுமை அறிந்திலமோ

87. தீண்டாதார் விண்ணப்பம்

(ஆண்டிப் பண்டாரம் - உன்னை வேண்டிக் கொண்டேன் -
மெட்டு)

638 விண்ணப்பஞ் செய்தோம் - விடையை
     வேண்டிக் கொள்கின்றோம்