முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 101 |
Untitled Document
631 | | தக்க திறனிருந்தும் - நல்ல தருணம் வாய்த்திலதேல், மிக்க புகழெய்தி - மக்கள் மேன்மை அடையாரம்மா! |
632 | | சூழ்நிலை வாய்த்திலதேல் - சூரனும் சோம்பி மடிவானம்மா! பாழ்நிலத் திட்டவிதை வளர்ந்து பயன்மர மாமோ? |
633 | | இருளும் அகலும் இரவியும் தோன்றும்; பொருவில் இத் தாமரைப் பூவும் மலரும்; மலரும் பொழுது இவ் வன்சிறை நீங்கி. உலகில் எங்கும் உலவித் திரிந்து, பூவெழு பற்பல புதுவனங் கண்டு, நாவெழு சுவைதரு நறைமிக உண்டு, வாழ்குவன்' என்றொரு மதுகரம் இருப்ப, தாழ்மத வேழமொன் றாழ்கயம் இறங்கிப் பாசிலை பூவெலாம் பறித்து, வீசி எறிந்து வெறிகொண் டதுவே. |
634 | | 'மூடிக் கவியு மிருட்பகை நீங்கும்; இம் மூதுலகைத் தேடிக் கதிரு முதிக்கும்; கமலஞ் சிரிக்கும்' எனக் கூடிக் குவியு மலருறை வண்டுளங் கொண்டமைய ஆடிக் குடைந்து மதவேழம் ஓடை யழித்ததுவே. | |
|
|