பக்கம் எண் :

104கவிமணியின் கவிதைகள்

Untitled Document
646 பார்ப்பார்கள் தோள் சுமந்து
     பாணரைமுன் திருக்கோயில்
சேர்த்தார்கள் என்ற கதை
     தெரியாதோர் உண்டோ? ஐயா!

647 கள்ளுடனே ஆடுகோழி
     கலந்துண்ணும் காளிதேவி
உள்ளிருக்கும் கோயிலே
     உரிமைஎமக் கிலையோ? ஐயா!

648 கள்ளுடனே ஆடுகோழி
     கலந்துண்ணும் காளிதேவி
பள்ளர் எமைக் கண்டவுடன்
     பயந்தோடிப் போவாளோ?

649 காப்பாற்றி நமையாளும்
     கடவுளரும் மக்களுள்ளே
பார்ப்பார்கள் பறையரென்ற
     பகுப்பேதும் வைத்ததுண்டோ?

650 கோவிலிலே தீட்டேறிக்
     குடிபுகுமோ? குளிப்பவரின்
பாவமெல்லாம் கங்கையிலே
     படிந்திடுமோ; கூறம், ஐயா!

651 பூவாரம் அணிந்தபிரான்
     பொன்னடிக்கீழ் நின்றெளியேம்
தேவாரம் பாடில் அவர்
     செவிக்கின்பம் ஆகாதோ?

652 பாவிகளை ஈடேற்றிப்
     பதம்அளிக்கும் பரமசிவம்
கோவிலிலே எமைக்கண்டால்
     குடிமுழுகிப் போய்விடுமோ?

653 காணுதற்குப் கண்அளித்த
     கடவுளடி கண்டுதொழ
வேணுமென்று மனிதருக்கும்
     விருப்பமெழல் அதிசயமோ?