பக்கம் எண் :

108கவிமணியின் கவிதைகள்

Untitled Document
679 வழியில் விழுபவரைத்
     தழுவி யெடாது படு-
குழியில் உருட்டிப் பெரும்
     பழியை நிதமும் தேடும் (இந்த)

680 உண்ணீர் விரும்பி வீட்டை
     நண்ணி ஒருவன் நின்று
கண்ணீர் விடினும் செம்பில்
     தண்ணீர் அளித்திடாத (இந்த)

681 முங்கிக் குளிக்கக் குளம்,
     தங்கியிருக்க இடம்
எங்கு மிலா தெளியர்
     பங்கப் படும் புவியில் (இந்த)

682 ஈசன் அடிபணிய
     ஆசை வளர்ந்து வரும்
நேசர் தமைத் தடையும்
     நீச நில மிதினில் (இந்த)

683 இட்ட சகோ தரை
     எட்ட விலக்கி நிதம்
கட்ட மிகப்ப டுத்தும்
     துட்ட உலகு தனில் (இந்த)

684 சண்டிக் குதிரை மேலே
     நொண்டித் துரை சவாரி
கொண்டது போலும் வாழ்வு
     கண்டது போதம், ஐயா! (இந்த)

89 தீண்டாமைப் பேய்
ஆனந்தக் களிப்பு
685 தீண்டாமைப் பேய் அறிவீரோ? - அதன்
சேட்டைகள் முற்றும் தெரிந்திடுவீரோ?
686 பண்டுபண் டேயுள்ள பேயாம் - இந்தப்
     பாரத நாட்டைப்பாழ் ஆக்கிய பேயாம்;
சண்டைகள் மூட்டிடும் பேயாம் - அது
     சாத்திரி மார்பூசை கொண்டிடும் பேயாம்.