முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 107 |
Untitled Document
672 | | பதவியில்லை, பணமில்லை, படிப்பேதும் இல்லை எமக்கு உதவிசெய்ய உங்களுக்கு உள்ளம் இரங்காதோ? ஐயா! |
673 | | வையகத்தில் ஏழைகளும் மானிடராய்ப் பிறந்துவிட்டோம்; உய்யவழி தேடுகின்றோம்; உதவிசெய்ய வேண்டும், ஐயா! |
674 | | வேண்டாத வாதம்இன்னும் விளைப்பீரோ? அடிகளையும் தீண்டாமைப் பேய்க்கு உயிரைத் தியாகமிடச் செய்வீரோ? |
675 | | நாடாளக் குடியரசு நாடுவார் ஆலயத்தில் நீடாகத் தனி அரசு நிலைநாட்டத் துணியலாமோ? |
88. ஹரிஜனங்களுக்காக வருந்தல் |
| | ("நினைப்ப தெப்போது நெஞ்சே - ஈசன் பதத்தை நினைப்ப தெப்போது நெஞ்சே.") |
676 | | இந்தப் பிறப்பு வேண்டாம் - இதுவொழிய எந்தப் பிறப்பும் வரட்டும். |
677 | | நொந்த புண்ணிலே எரி பந்தம் இடுவது போல் சந்ததம் ஹரிஜன நிந்தனை செய்திடும் (இந்த) |
678 | | ஜாதி வெறியினால் வி- ரோதிக ளாகிமக்கள் வீதி வருவதும் அ- நீதி என உரைக்கும் (இந்த) | |
|
|