Untitled Document | | பக்தி மஞ்சரி (2) | | | 10. உமையொருபாகக் குருக்கள் | 38. | | வேறும் ஒருதுணையான் வேண்டுவனோ?வேணுவனம் தேறும் உமை யோர்பாகத் தேசிகனே கூறும்எனக்கு எய்யாப் பிறவி இருள் அகல நீ அளித்த பொய்யா விளக்கிருக்கும் போது |
| | 11. கோவில் வழிபாடு | 39. | | கோவில் முழுதுங்கண்டேன் உயர் கோபுரம் ஏறிக்கண்டேன் தேவாதி தேவனையான் தோழி தேடியுங் கண்டிலனே |
40. | | தெப்பக் குளங்கண்டேன் சுற்றித் தேரோடும் வீதிகண்டேன் எய்ப்பில்லைப்பாம் அவனைத் தோழி ஏழையான் கண்டிலனே |
41. | | சிற்பச்சிலைகண்டேன் நல்ல சித்திர வேலைகண்டேன் அற்புத மூர்த்தியினைத் தோழி அங்கெங்கும் கண்டிலனே |
42. | | பொன்னும் மணியுங்கண்டேன் வாசம் பொங்குபூமாலை கண்டேன் என்னப்பன் எம்பிரானைத் தோழி இன்னும்யாம் கண்டிலனே |
43. | | தூபமிடுதல் கண்டேன் தீபம் சுற்றி எடுத்தல் கண்டேன் ஆபத்தில் காப்பனைத் தோழி அங்கேயான் கண்டிலனே |
44. | | தில்லைப்பதியுங்கண்டேன் அங்குச் சிற்றம்பலமுங் கண்டேன் கல்லைக்கனிசெய்வோனைத் தோழி கண்களாற் கண்டிலனே | |
|
|