பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு11

Untitled Document
8. சரஸ்வதி துதி

34. நாடிப் புலங்கள் உழுவார் கரமும்,
     நயவுரைகள்
தேடிக் கொழிக்குங் கவிவாணர் நாவும்,
     செழுங்கருணை
ஓடிப் பெருகும் அறிவாளர் நெஞ்சும்,
     உவந்துநடம்
ஆடிக் களிக்கும் மயிலே! உன் பாதம்
     அடைக்கலமே,

வேறு

35.   வெள்ளைக் கலையுடுத்து, வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் - பிள்ளைமொழி
வெள்ளைக் கவிகண்டு, வெள்ளையென் றெண்ணாமல்,
உள்ளத்திற் கொள்வாள், உவந்து,

9. இலக்குமதி துதி

36.   பொருளற் றவர்க்கிங் வுலகில்லை என்றிப்
     புவிபுகழும்
தெருளுற்ற ஞானிஅப் பொய்யா மொழியில்
     தெரிந்துரைத்தான்;
மருளுற்ற மாந்தரும் வற்றாத செல்வம் இவ்
     வையகத்துன்
அருளுற் றலா தடை வாரோ? செந் தாமரை
     ஆண்டவளே!

37.   சித்தம் தெளிந்திடும், செய்வினை யாவும்
     திருத்தமுறும்,
நித்தம் மறிந்தெழு செல்வமும் தங்கி
     நிலைபெறம், நல்
முத்தர்க் குரிய பெரும்பதம் வாய்க்கும், இம்
     மூதுலகில்
பத்தர்க் கருளுந் திருமகள் பாதம்
     பணிபவர்க்கே.