பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு127

Untitled Document
820 கோடி கோடியாக - நீங்கள்
     குவித்திடும் லாபம்
வாடும் எம்மக்கள் - உண்ணா
     வயிற்றுச் சோறலவோ?

821 மனம் திரியாமல் - காலை
     மாலை யெப்பொழுதும்
குனிந்து வேலைசெய்வோர் - கும்பி
     கொதிக்க லாமோ? ஐயா!

822 கும்பி கொதித்திடவே - உடல்
     கூனிக் குறுகி நின்று
நம்பும் எங்களையே - நீவிர்
     நலிய வைக்கலாமோ.

823 வாழ வேண்டுமெனில் - தொழில்கள்
     வளர வேண்டுமையா!
ஏழை என்றொருவன் - உலகில்
     இருக்க லாகாதையா!

104. வேலையில்லாத் திண்டாட்டம்
824 சாத்தி ரங்கள் சரிதங்கள் மன்னவர்
கோத்தி ரங்கள் குலங்கள் இலக்கண
சூத்தி ரங்கள் தொகுத்து விரித்துநான்
ஆத்தி ரத்தொடு கற்ற தளவுண்டோ?

825 மண்ணில் உள்ளவும் வானகத் துள்ளவும்
எண்ணி எண்ணி எழுதிய நூலும்
நுண்ணிய தாக நுழைந்து தெரிந்தவை
கண்ணி யம்பெறு காலம்எக் காலமோ?

826 பட்டம் பெற்றனன்; பண்டிதர் தம்மிடம்
மட்டி லாத மதிப்புரை வாங்கினன்;
துட்டி லாது சுழன்று கறங்கும்இக்
கட்டம் நீங்கு வழிஇனும் கண்டிலேன்.

827 வீடு விற்றும், விளைநிலம் விற்றும், மாடு
ஆடு விற்றும், அணிமணி தாம்விற்றும்,
பாடு பட்டுப் படித்த படிப்பெலாம்
வாடும் என்பசி யாற்றிய தில்லையே.