பக்கம் எண் :

126கவிமணியின் கவிதைகள்

Untitled Document
812 ஈரோடு பேனுக்கு இடமாச்சு - கூந்தல்
     ஈந்தஞ் செடியது போலாச்சு;
வாரி முடிப்பதும் இல்லை, அம்மா - எண்ணெய்
     மாதமும் மூன்றாக அறியாதம்மா!

813 புண்ணும் சிரங்கும் நிறைந்ததம்மா! - அதில்
     போட மருந்தும் கிடையாதம்மா!
கண்ணில் உறக்கமும் இல்லை, அம்மா! - எங்கள்
     கஷ்டம் அறிபவர் உண்டோ? அம்மா!

103. தொழிலாளிகளின் முறையீடு
814 பாடு படுவர்க்கே - இந்தப்
     பாரிடம் சொந்தமையா!
காடு திருத்தி நல்ல - நாடு
     காண்ப தவராலவோ?

815 மந்திர மோதுவதால் - எங்கும்
     வயல்வி ளைவதுண்டோ?
தந்திரப் பேச்சாலே - அரிசி
     சாதமாயிடுமோ?

816 கட்டும் ஆடையாகப் - பருத்தி
     காய்த் தளிப்ப துண்டோ?
சட்டி பானையெலாம் - மண்ணில்
     தாமே எழுவதுண்டோ?

817 உழுது பயிர்செய்வோன் - வயிற்றுக்
     குணவு பற்றாமல்,
அழுத முதுநிதம் - நிற்ப
     தறியீ ரோ! ஐயா!

818 ஆடை நெய்திடுவோன் - போர்க்கும்
     ஆடை யில்லாமல்
வாடை கொண்டுநிதம் - கிடந்து
     வருந்த லாமோ? ஐயா!

819 வீடு கட்டுமொரு - கொத்தன்
     விடுதி யில்லாமல்,
ஆடு மாடுகள்போல் - உலகில்
     அலைய லாமோ? ஐயா!