முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 125 |
Untitled Document 804 | | அன்னப்பால் காணாத ஏழைகட்கு - நல்ல ஆவின்பால் எங்கே கிடைக்கும், அம்மா! என்னப்பா! யாம்படும் பாட்டையெல்லாம் - சென்று யாரிடம் சொல்லி அழுவோம், அம்மா! |
805 | | இட்டெலி ஐந்தாறு தின்றோம் என்பீர் - நீங்கள் ஏதும் கருணை யிலீரோ? - நீங்கள் பட்டினி யாக இறந்திடுனும் - நாங்கள் பாவம் பழிசெய்ய மாட்டோம், அம்மா! |
806 | | தேயிலை தேயிலை என்பீர், அம்மா! - இது தேக்கிலை தானோ தெரியாதம்மா! வாயும் வயிறும் நிறைந்திடுமோ? - இதில் வைத்த அமுதம் திகைந்திடுமோ? |
807 | | காப்பி காப்பியென்று கத்துவீரே - அதைக் கண்ணாலே கண்டதும் இல்லை, அம்மா! சாப்பிடற் கேற்ற உணவிதுவோ? - அன்றிச் சட்டையோ! தொப்பியோ! கூறும், அம்மா! |
808 | | ஆனைக்கொம்பன் சாதம்உண்டோம் என்பீர் - இதை ஆரே உலகினில் நம்பிடுவார்? தேனைப் பழித்த மொழியுடையீர் - எம்மைத் தேராத பித்தர்என் றெண்ணினீரோ? |
809 | | சோப்புச் சோப்பென்று புகழ்ந்திடுவீர் - அது சுட்டுக் கடிக்குங் கிழங்கதுவோ? காப்புக் கைவீசி நடப்பவரே - அதன் காரியம் சற்றே உரைப்பீரே! |
810 | | ஆனி ஆடிமாதக் கொந்தலிலே - மந்தை ஆடுகள் போலக் கொடுகிநிற்போம்; வேனிலில் வெந்துடல் வேர்த்திடவே - வெயில் வேளை அலைந்து திரிந்திடுவோம். |
811 | | சுற்றிய கந்தை ஒருமுழமாம் - அதில் தோன்றிய பீறலும் ஆயிரமாம்; பற்றும் அழுக்கினைப் போக்க வென்றால் - உடை பஞ்சு பஞ்சாகப் பறக்கும், அம்மா! | |
|
|