பக்கம் எண் :

124கவிமணியின் கவிதைகள்

Untitled Document
102. செல்வமும் சிறுமையும்
செல்வச் சிறுமியர் களிப்பு
797 பாகமாகச் செய்த பண்டம் உண்போம் - நன்றாய்ப்
     பக்குவம் வந்த பழங்கள் உண்போம்;
தாகமா னால்பல பானகமும் - தாயார்
     தந்திட உண்டு மகிழ்ந்திடுவோம்.

798 காலத்துக் கேற்ற உடையணிவோம் - வாசம்
     கட்டிய சந்தனம் பூசிடுவோம்;
கோலமாய் சீவிச் சிணுக்கெடுத்து - மலர்
     கூந்தலிற் சூட்டி அழகுசெய்வோம்.

799 பந்துகள் ஆடிப் பழகிடுவோம் - கழல்
     பாங்கியர் தம்மொடும் ஆடிடுவோம்.
சந்தம் எழக்கும்மி பாடிடுவோம் - சுற்றிச்
     சப்பாணி கொட்டிச் சிரித்திடுவோம்.

800 ஓடி ஒளித்துக் களித்திடுவோம் - நாங்கள்
     ஒற்றை இரட்டையும் வைத்திடுவோம்;
நாடியே வட்டுகள் ஆடிடுவோம் - தோழி
     நாணக்கண் பொத்தி நகைத்திடுவோம்.

801 உன்னி யெழும்ஊஞ்சல் ஆடிடுவோம் - கேட்போர்
     உள்ளம் குளிரவே பாடிடுவோம்;
சின்னஞ் சிறுவீடு கட்டிடுவோம் - அதில்
     சித்திர வேலைகள் செய்திடுவோம்.

802 பத்துப் பசுக்கள்எம் வீட்டில் உண்டு - நல்ல
     பாலுக்கு யாதொரு பஞ்சமில்லை;
நித்தம் சுகமாக வாழ்ந்திடுவோம் - இந்த
     நீணிலத் மெமையொப் பாரும் உண்டோ?

ஏழைச்சிறுமியர் மனப்புழுக்கம்
803 நல்லபண் டங்களைக் கண்டறியோம்; - ஒரு
     நாளும் வயிறார உண்டறியோம்,
அல்லும் பகலும் அலைந்திடுவோம் - பசி
     ஆற வழியின்றி வாடிடுவோம்.