பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு123

Untitled Document
789 பட்டப் பகலை இரவென் றழைத்திடும்
     பாழான சாத்திரம் ஏதுக்கடா!
கட்டிப் பளுகுங் கதைகளைக் - கேட்டிந்தக்
     காதுபுண் ணானதும் கொஞ்சமோடா!

790 கொக்கோ! குருவியோ! காக்கையோடா! - நாமும்
     கோழியோ! ஆந்தையோ! கூகையோடா!
மக்கள் இனத்திற் சேராதவரோ? - உண்ண
     வாயும் வயிறும் இல்லாதவரோ?

791 சண்டிக் குதிரைமேல் நொண்டித் துரை - செய்யும்
     சவ்வாரி போலும்இவ் வாழ்வதனில்,
உண்ட துடுத்ததை யன்றிநாம் - வேறெதும்
     உண்மையாய்க் கண்டதும் உண்டோ? அடா

792 கோட்டிலே ஜட்ஜி இருப்பதும் - வக்கீல்
     கொட்டி முழக்கிநின் றாடுவதும்,
கூட்டிலே கள்ளன் நடுங்குவதும் - இந்தக்
     கும்பி செயுஞ்செயல் அல்லவோடா?

793 உண்டு வயிறு நிறைந்துவிட்டால் - உடன்
     உள்ளக் கவலை ஒழிந்ததடா!
மண்டை யுடைத்து வழக்குகள் - பேசி நாம்
     வாணாளை வீணாளாய்ப் போக்கோம், அடா!

794 மஞ்சள் சிவப்புத் துணியணிவோம் - பஞ்ச
     வர்ணக் கிளைகளைப் போல் நடப்போம்;
வஞ்சனை சூதுகள் செய்யமாட்டோம் - கோர்ட்டு
     வாசலை எட்டி மிதிக்கமாட்டோம்.

795 ஆதி சிவனுமோர் ஆண்டி, அடா! - அவர்க்கு
     அன்பான பிள்ளைகள் நாமே, அடா!
ஓதுமெய்ஞ் ஞானியர் யாவருமே - நமக்கு
     உற்ற உறவினர் ஆவார். அடா!

796 லட்சமும் கோடியும் வேண்டாம், அடா! - அதை
     ரட்சிக்க நம்மாலே ஆகுமோடா!
அட்சய பாத்திரம் உண்டே, அடா! - நமக்கு
     ஆரே நிகர்இவ் வுலகில்? அடா!