Untitled Document | | தீய குலம்எனத் தள்ளுவரேல் - அது தெய்வம் பொறுக்கும் செயலமோ? |
782 | | வேதியராலே மழைவருமேல் - வயல் வேலை செய்யாது விளைந்திடுமோ? வாதமெலாம்கட்டி வைத்திடுவோம் - ஒத்து வாழ்வதை மேற்கொண்டு டுழைத்திடுவோம். |
783 | | வீட்டுக்குள் சண்டைகள் போடுவதேன்? - கூரை வெந்து விழுவதும் கண்டிலிரோ? நாட்டுக்கு நன்மையை நாடுபவர் - இந்த நாடகம் ஆடல் நகைப்பலவோ? |
784 | | மானமே வாழ்வின் உயிர்நிலையாம - அதை மாசுறச் செய்தல் கொடுங்கொலையாம்; ஈச சாதியெனும் பேச்சினைப்போல் - நெஞ்சை ஈர்ந்திடும் வாளொன்று வேறுளதோ? |
785 | | மன்னுயிர்க் காக முயல்பவேர - இந்த மானிலத் தோங்கும் குலத்தினராம்; தன்னுயிர் போற்றித் திரிபவரே - என்றும் தாழ்ந்த குலத்தில் பிறந்தோர், அம்மா! |
| | 101. பிச்சைக்காரர் கும்மாளம் | 786 | | ஆல மரத்தின் நிழலிதுவே - நல்ல ஆயிரங் காலெழு மண்டபமாம்; சாலவே தங்கும் பறவையெலாம் - அதிற் சங்கீதம் பாடிடும் பாடகராம். |
787 | | ஊர்களி லுள்ள உழவர்களே - நமக்கு ஓயா துழைத்திடும் ஊழியராம்; சாரும்இவ் வீடுகள் யாவையுமே - உண்ணச் சாதம் சமைத்திடுஞ் சாலைகளாம். |
788 | | பாரிற் பரந்த பொடிமணலுக்கு - எந்தப் பஞ்சணை மெத்தை ஈடாகும், அடா! காரும் பசானும் கரிந்திடினும் - ஒரு காரிய மில்லை, அறிவாய், அடா! | |
|
|