முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 129 |
Untitled Document 835 | | எங்கே இருந்துநாம் வந்தோமோ? - இனி எவ்விடம் சென்றுதான் சேருவமோ? இங்கே அறிந்தவர் யாவர். அடா! - இந்த ஏடுகள் உண்மை இயம்புமோடா! |
836 | | ஆண்டுக் கொருமுறை யாகிலும் எஞ்சினுக்கு ஆயில் இடுவ தறியாயோடா! வேண்டிப் பரமன் படைத்த உடல்இது வேலைகள் செய்து அலுக்காதோ? அடா! |
837 | | நல்லெண்ணெய் பூசிக் குளிப்போம், அடா! - நல்ல நல்ல உணவுகள் உண்போம், அடா! அல்லும் பகலும் உழைப்பதெல்லாம் - வயிறு ஆரப் புசிப்பதற் கல்லவோடா! |
838 | | இட்டெலி வீரர்தென் னிந்தியராம் - என்பது இன்றுநாம் காட்டி விடுவோம், அடா! சட்டினி நண்பன் துணையிருக்க - அதில் சந்தேகம் உண்டோ? நீ சொல்வாய், அடா! |
839 | | தேடிச் செலவுசெய் யும்பொருள் நம்பொருள்; சேர்த்துவைக்கும் பொருள் யார்பொருளோ! வாடி வயிற்றுக்கொன் றீயாத லோபிக்குஇவ் வையக வாழ்வேதும் உண்டோ? அடா! |
840 | | சின்னஞ் சிறுவர் சிறுமியரை - இன்று சிங்காரம் செய்துநாம் பார்ப்போம், அடா கன்னத் தவரிடும் முத்தமொன்றுக்கு - இந்தக் காசினி முற்றும் ஈடாகு மோடா! |
841 | | பெண்டுகள் பிள்ளைகள் நெய்த கதருடை பீதாம் பரத்தினும் மேலாம், அடா! கொண்டாடிப் பண்டிகை நாளில் அணிந்திடில், கோடி கோடிப் புண்யம் உண்டாம், அடா! |
842 | | இட்டமான பாடல் பாடுவோமே! - நல்ல இன்பக் கதைகளைச் சொல்லுவோமே! வட்டமாய்ச் சுற்றியிருப்போமே! - இன்று வந்த விகடனைப் பார்ப்போமே? | |
|
|