முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 131 |
Untitled Document
850 | | பஞ்சினையான் பன்னுவேனோ? பணிசெய்வேனோ? - இந்தப் பசலை அழாதபடி பால்கொடுப்பேனோ? நெஞ்சிரக்கமுள்ளவரே கொஞ்சம் பொறுத்தால் - இன்னும் நேரியநல் லாடை நெய்துகொண்டு வாரோமோ? |
851 | | அஞ்சு வயதுமகள் கோலம் இட்டால் - அதை அழகில்லை என்றழிக்கும் தாயரும் உண்டோ? பஞ்சு படுவதிலும் பெரும்பாடு - நாங்கள் படுவதும் நீங்கள்அறி யாததோ? ஐயா! |
852 | | காசுமியர் சால்வை நெய்த கையும் இலையோ - உயர் காசியிலே நெய்தபட்டின் காலமும் போச்சோ? மாசிலாத டாக்காவின் மஸ்லினாடை - இன்னும் வாவென்றால் வாராதோ? வளர்ந்திடாதோ? |
853 | | அந்நிய நாடுகளுக் காடையனுப்பி - மானம் அழியாமல் காத்ததுங்கள் முன்னோர் அல்லவோ? இந்நிலை மறந்துநீங்கள் இந்தநாளில் - உங்கள் இடுப்புத் துணிக்கு அலைவ திழிவல்லவோ? |
854 | | சாயமிட்ட சேலைகள் நெய்துதாராமோ? - நல்ல சரிகையில் வேலைசெய்து கொண்டு வாரோமோ? நேயமெழ ஆதரித்தால் போதும், ஐயா! - இந்த நீணிலத்தில் வெற்றியொடு நிற்போம் ஐயா! |
855 | | கைகால் களைக்க நெய்த கதராடை - இரு கண்கள் சடைய நெய்த கதராடை; ஐயா, நீர் வாங்கியதை அணிவீரோ? - எங்கள் அரும்பசிக்கு அன்னம் ஏதும் அளிப்பீரோ? |
856 | | குறுக்கு முறியநெய்த கதராடை - கும்பிக் கொதிப்பை அடக்கிநெய்த கதராடை; மறுத்துநீர் தள்ளாமல் கொள்ளுவீரோ? - எங்கள் வயிற்றில் எரிதணியச் செய்குவீரோ? |
857 | | தேசமெல்லாம் புகழ்ந்திடும் ஆடை, ஐயா! - மேலைச் சீமையையும் நடுக்கிடும் ஆடை, ஐயா! காசுபணம் இல்லாத ஏழைகளுக்காய் - அந்தக் காந்திமகான் போற்றும்காம தேனு, ஐயா! | |
|
|