பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு133

Untitled Document
866 சர்ச்சிலிடும் கர்ச்சனையில்
     தளர்ந்து மனம் சடைவாரோ.
மெச்சிடவே இந்தியரும்
     வீரமொழி பகர்வாரோ?

867 உபசார விருந்துகளால்
     ஊக்கமெலாம் உடைந்திடுமோ?
அபசாரம் இந்தியர்கள்
     அணுகாமல் காப்பாரோ?

868 'புஞ்சிரிப்பில், கைகுலுக்கில்,
     புத்திமிக மயங்கிடுமோ?
நெஞ்சிருப்பை நம்மவரும்
     நிறைவேற்றி வருவாரோ?

869 இரைந்தழுது பட்டதெல்லாம்
     இந்தியர்தம் உள்ளத்தில்
கரைந்திடுமோ? இந்நாளில்
     கனலாகி மூண்டெழுமோ?

870 மாதரசி சரோசினியார்
     வாக்குநயம் பலித்திடுமோ?
மூதறிஞர் மாளவியா
     முயன்றதவம் முற்றிடுமோ?

871 சீக்கிரமாய் காந்திமகான்
     செயக்கொடியும் கட்டுவரோ?
ஊக்கமுடன் இந்தியரும்
     உளம்மகிழ்ந்து வாழ்வாரோ? (குறத்திப்)

108. வீரத்தாய்
872 தாயிற் சிறந்த தப்பா! - பிறந்த
     தாய்நா டதுபேணார்
நாயிற் கடைய ரென - இந்த
     நானிலம் சொல்லும், அப்பா!

873 தாய்நிலம் காத்திடவே - ருஷியர்
     சாவும் மதித்திடாமல்
காய்சினப் போரதிலே - சென்று
     கலப்பது கண்டிலையோ?