Untitled Document 874 | | நன்றுபுரி வதற்கே - உடலை நாமிங் கெடுத்தோம், அப்பா! நின்று தெரிந்திடுவாய் - அதுதான் நீர்மேற் குமிழி, அப்பா! |
875 | | பாரத நாடளித்த - உன்றன் பரம்பரை முன்னோரின் வீரச் செயலை எல்லாம் - நீயும் மேற்கொள்ள வேண்டும், அப்பா! |
876 | | புகழ்வி ளையுமிடம் - அந்தப் போர்முனையே, அப்பா! மகனே உன்தாயின் - உள்ளம் மகிழச் செய்வாய், அப்பா! |
877 | | சற்றும் தளராமல் - இன்று சண்டைக்குப் போய்வருவாய்; வெற்றி கிடைக்கும், அப்பா! - ஈசனை வேண்டித் தொழுதேன், அப்பா. |
| | 109. தேசியக் கொடியின் சிறப்பு | 878 | | தேசக் கொடியின் சிறப்பைச் சிறிதேஇங்கு ஆசைப் பெருக்கால் அறைகின்றேன் - மாசிலா வீரரைப் பெற்று விரிந்த புகழ்பெற்ற பாரதத் தாயைப் பணிந்து |
| | வேறு | 879 | | பாரில் உயர்ந்தமலை இமயமலை - அன்னை பாரத தேவி பாராட்டு மலை; சீரில் உயர்ந்திடும் தேசக்கொடி - அதன் சிகரம் அணிந்தின்று பறக்குதுபார். |
880 | | வீரர் துணிந்தேறி நட்டகொடி - இது வெற்றி விருதா யெடுத்தகொடி; யாரும் இறைஞ்சி வணங்கும்கொடி - நமக்கு என்றும் சுதந்திரம் ஈட்டும் கொடி. | |
|
|