முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 141 |
Untitled Document | | வீமன் வீர பாண்டியனின் வெற்றி முரசு முழக்கியிந்தப் பூமி மீதெந் நாளுமவன் புகழைப் பாடிப் போற்றுவமே. |
920 | | காய்ந்து போரில் வெள்ளையரைக் கறங்கச் செய்த ஆண்சிங்கம்; ஆய்ந்து வினைகள் செய்துநிதம் அறங்கள் காத்த அறிவுடையோன்; பாய்ந்து நாயை முயல்விரட்டும் பாஞ்சை ஆண்ட பாண்டியனுக்கு ஏய்ந்த புகழை இனியதமிழ் இசையிற் பாடிப் போற்றுவமே. |
921 | | மான முற்றும் விலைகொடுத்து மண்ணை வாங்கி அரசாளும் ஈன வாழ்வை உள்ளத்தில் எள்ளத் தனையும் எண்ணாதோன்; ஊன உடலை வெறுத்துதறி உலகி லழியாய்ப் புகழ்நாட்டி வானம் சென்ற வீரனைநாம் மறவா தென்றும் போற்றுவமே. |
922 | | கட்ட மொம்மன் சீமையிலே காகம் பறவா தெனுமாறு சட்ட திட்டம் செய்துகுடி தாங்கி நின்ற ஜகவீரன்; துட்டர் அஞ்சும் துரைராஜன் துணிந்த வீரன் என்றுலகில் எட்டுத் திசையும் புகழ் பெற்றோன் எங்கள் வீர பாண்டியனே. |
923 | | கட்டமொம்மன் சீமையிலே காகம் பறவா தெனுமாறு சட்ட திட்டம் செய்துகுடி தாங்கி நின்ற ஜகவீரன்; | |
|
|