Untitled Document | | வந்த பொல்லா வெள்ளையரை மதியா வீர பாண்டியனைச் சிந்தை மறவா தோவியத்தில் சிலையில் கண்டு போற்றுவமே. |
916 | | தஞ்சம் என்று வந்தவரைத் தாங்கும் இனிய குணசீலன்; பஞ்சம் அறியாப் பழம்பதியாம் பாஞ்சைப் பதியில் அரசாண்ட விஞ்சு புகழ்சேர் வீராதி வீரன் கட்ட பொம்மன்பேர் நெஞ்சில் எழுதி வைத்தன்பால் நித்தம் நித்தம் போற்றுவமே. |
917 | | 'தானம் வேண்டில் தருகின்றேன்; தருமம் வேண்டில் தருகின்றேன்; வானம் இடிந்து விழுந்திடினும் வரிதந் தும்மை வணங்கேன்' என்று ஏனை வெள்ளைக் கம்பெனியர்க்கு எடுத்துக் கூறித் தென்னாட்டின் மானம் காத்த பாண்டியனை மறவா தென்றும் போற்றுவமே. |
918 | | 'தானம் வேண்டில் தருகின்றேன்; தருமம் வேண்டில் தருகின்றேன்; வானம் மழையைப் பொழியுதையா! மண்ணில் பயிரும் வளருதையா! யான்இங் குமக்கு வரியிறுப்ப தேனோ?' என்று வெள்ளையர்முன் மானம் காத்த பாண்டியனை மறவா தென்றும் போற்றுவமே. |
919 | | சீமை வெள்ளைக் காரர்படை சிதறி ஓட முறியடித்தோன் ஊமைத் துரையென் றுலகுபுகழ் ஒப்பில் விஜயன் முன்வந்த | |
|
|