முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 139 |
Untitled Document | | வேறு | 910 | | நெற்றி வியர்வை நிலத்தில் விழஉழைப்போம்; பெற்ற சுதந்திரத்தைப் பேணுவோம் - சுற்றமெனப் பன்னாட்டு மக்களையும் பாராட்டிப் பாரதமா நன்னாட்டில் வாழுவோம் நாம். |
| | 113. வ.உ.சிதம்பரம் பிள்ளை | 911 | | கைநோவக் கால்நோவக் கல்லுடைத்து செக்கிழுத்து மெய்சோர்ந்தும் ஊக்கம் விடாதுநின்ற - ஐயன் சிதம்பரம் அன்றுசிறை சென்றிலனேல், இன்று சுதந்திரம் காண்பாயோ? சொல். |
912 | | அஞ்சுவனோ வெள்ளையரின் ஆட்சியொழிப் பேன்என்று வஞ்சினம் கூறிநின்ற மாவீரன் - விஞ்சுபுகழ் செந்தமிழ்ச் செல்வன் சிதம்பரப்பே ரண்ணலை நாம் வந்தனை செய்வோம் மகிழ்ந்து, |
913 | | கப்பலை ஒட்டிக் கடுங்காவதற்கு ஆளாகி உப்பிலாக் கூழ்உண் டுடல்மெலிந்தோன் - ஒப்பிலாத் தென்னாட்டு வீர திலகன் சிதம்பரத்தின் நன்னாமம் வாழ்த்துகவென் நா. |
| | 114. வீரபாண்டியக் கட்டபொம்மன் | 914 | | மீசை முறுக்கிநின்று வெள்ளையரே உங்களுக்கோர் காசும் தாரோமென்று கர்ஜித்த - கேசரியாம் பாஞ்சைப் பதிவீர பாண்டியனை நெஞ்சமே வாஞ்சையொடு பாடுவோம் வா. |
| | வேறு | 915 | | செந்தில் முருகன் சேவடியைத் தினமும் போற்றித் தொழுதிடுவோன்; சந்தக் கவிகேட் டுளமகிழ்ந்து தரளம் வாரி அளித்திடுவோன்; | |
|
|