பக்கம் எண் :

154கவிமணியின் கவிதைகள்

Untitled Document
997 சிந்தை கவரும் சிகவாமி நற்சரிதம்
செந்தமிழில் சுந்தரன் செய்தனனால் - முந்தவரு
மூலத்தை வெல்லும் மொழிபெயர்ப்பென் றேஎவரும்
சாலப் புகழ்ந்திடவே தான்.

998 ஆசிரியன் பேர்விளங்க ஹார்வி புரங்கண்ட
மாசிலா மாணவர் மாணிக்கம் - பேசுபுகழ்ச்
சுந்தரன் வந்துதித்த தொல்குலம் இந்நிலத்துச்
சுந்ததம் வாழ்க, தழைத்து!

125. அவதானி ஆறுமுகம்

999 ஆறுமுகம் பிள்ளை அவதானம் கண்டெளியேன்
வேறுமுக மன்கூற வேண்டுமோ? - தேறுமதிச்
சேஷையா மெச்சித் திருவாய் மலர்ந்து, 'ஸபாஷ்!
பேஷையா!' என்ற பிறகு.

1000 மன்றுபுகழ் அண்ணா மலைமன் வரலாற்றை
இன்னமுதம் பாவால் இயம்பினான் - பன்னுதமிழ்
ஐயமறக் கற்றஅவதானி ஆறுமுகன்
வையமெல்லாம் போற்றி மகிழ்ந்து

126. செய்குத்தம்பித் பாவலர்

1001 கேட்டார் மகிழ்வடையக் கேளாதார் தேடிவரக்
கோட்டாற்றுச் சாதிரன்பால் கூறினாள் - நாட்டாரின்
சிந்தைகுடி கொண்டபுகழ் செய்குத்தம்பிப்பாவலர்மேல்
பைந்தமிழில் எழுது பா

127. உடையார் பிள்ளை

1002 இனிய தமிழில் இசைத் தமிழில்
     யார்க்கும் ஆசை தருந்தமிழில்
கனியும் அன்பும் பெருகஇரு
     காதும் குளிரக் கண்ணபிரான்
புனித சரிதம் எமக்கோதும்
     புலவன் உடையான் பிள்ளைக்குத்
தனமும் வாழ்வும் வாணாளும்
     தரணிமீது தழைக்குகவே