பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு153

Untitled Document
993 வையம் புகழும் திருவஞ்சி
     வளநா டதனை முடிசூடிச்
செய்ய முறைசெய் தரசாண்ட
     சேர மன்னர் சரிதமெலாம்
ஐயம் இன்றிச் சிலையிலெழுத்து
     அய்ந்து சொன்ன பேரறிஞன்,
துய்ய சீலன் சுந்தரன்பேர்
     சொல்லி நாளும் போற்றுவமே.

994 ஆடும் தில்ல அம்பலன்
     அடிகள் மறவா அன்புடையோன்,
பாடித் திருவா சகத்தேனைப்
     பருகிப் பருகி இன்புறுவோன்,
கோடைப் பதிசுந் தரமுனியைக்
     குருவாய்க் கொண்ட குணசீலன்,
ஈடி லாத பேரறிஞன்
     எங்கள் பெரியன் சுந்தரனே.

வேறு

995 சித்திரம் வரைந்து காண்போம்;
     சிலைகண்டு தொழுது நிற்போம்;
சத்திரம் கட்டி வைப்போம்;
     தருமங்கள் பலவும் செய்வோம்;
வித்தகன் சுந்தரன்பேர்
     மெய்ம்மையாய் விளங்க வைத்தல்,
இத்தமிழ் நாட்டில் வாழும்
     எம்மனோர் கடமை யன்றோ?

வேறு

996 எம்மொழியும் ஈடாகா திம்மொழிக் கென்றுலகம்
செம்மையுறக் கண்டு தெளிந்திடவே - நம்மினிய
செந்தமிழின் தெய்வச் சிறப்பெல்லாம் யாருரைத்தார்
சுந்தரனைப் போலத் தொகுத்து.