பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு159

Untitled Document
1021 அம்பொன் வேய்ந்த அரும்புகழும்
     அமுதங் கொணர்ந்த பெரும்புகழும்
இம்பர் ஒருங்கு பெற்றகுலத்து
     எழுந்த அண்ணா மலைமன்னன்
பம்பு மூட இருளகற்றும்
     பானு வாகி நல்லறங்கள்
நம்பி உலகில் நிதம்வளர
     நன்மை செய்து வாழுகவே!

1022 காந்தி யடிகள் திருவுள்ளம்
     கனிந்து போற்றும் குருதேவன்
ஆய்ந்த அகில கலையாளன்
     அண்ணல் தாகூர் அமைத்தவுயர்
சாந்தி நிகேதப் பெரும்பொழிலில்
     தமிழும் கமழச் செய்துபுகழ்
ஏந்தும் அண்ணா மலைமன்னன்
     என்றும் வாழ்க! வாழ்கவே!

132. அகஸ்தியலிங்கம்

1023 ஆரைப் பதியின் அழகிதிரு மீனாட்சி
சீராருள் சேவடியைச் சேவித்தேன் - ஊரெங்கே
ஆக்கும் பெரியோன் அகஸ்திலிங்க வேளெல்லாம்
பாக்கியம் பெற்றிடப் பார்

133. கேசவன் ஆசாரி

1024 ஈடும் எடும்புமிலா ஏகபல சாலியென்றிந்
நாடுபுகழ் கேசவ நண்பனே! - பீடுபெற
ஆரம் உனக்கின் றணிகின்றேன் நீயென்முன்
பாரம் எடுத்ததிறன் பார்த்து.