Untitled Document
1017 | | உள்ள முருகச் செவிகுளிர ஓதும் தெளிந்த செந்தமிழின் தெள்ளத் தெளிந்த செந்தமிழின் தெய்வ கீதம் செழித்தோங்க எள்ளத் தனையும் சலியாமல் இரவும் பகலும் உழைத்திடுநம் வள்ளல் அண்ணாமலை மன்னன் வாழ்க! வாழ்க! வாழ்கவே! |
1018 | | பாரி பாரி யென்றுகவி பாடும் புலவர் புகழ்பாட வாரி வாரி வழங்கிடுநம் வள்ளல் அண்ணா மலைமன்னற்கு ஓரும் ஜாதி மதபேதம் ஒன்றும் நோக்கா தெழுந்துலகில் நீரைப் பொழியும் மேகமலால் நிகர்வே றுண்டோ? நிகழ்த்துவிரே. |
1019 | | உருகி அன்பு பெருகிவழிந்து ஓடி யொழுக எதிர்வந்து வருக வருக வருகவென மதுர மொழிகள் பலகூறி அருகில் அமரச் செய்தென்னோடு அளவ ளாவி அமுதளித்த தருகை நீண்ட பெருந்தகையின் தருமம் ஓங்கி வளருகவே! |
1020 | | நாடு சேர்ந்த நல்லவையில் நடுநா யகமா யெழுந்தருளி ஈடிலாத பொன்னாடை எவருங் காண எனக்கணிந்து, பீடு மிகவே பெறவைத்த பெரியன் அண்ணா மலைமன்னன் நீடுவாழ ஈசனை யான் நித்தம் நித்தம் தொழுவேனே. | |
|
|