பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு161

Untitled Document
135. இராஜாஜி

1031 அன்னை யடிமை நிலைபோக்கி
     அறப்போர் வெற்றித் தளபதியாய்
மன்னுங் காந்தி யடிகளுக்கு
     வலக்கை யாக நின்றுதவி,
சென்னை மக்கள் புகழ்வளர்த்த
     செல்வா, ராஜ கோபாலா!
இன்னும் பல்லாண் டிவ்வுலகில்
     இனிது வாழ்க! வாழ்கவே!

1032 இனிய கனிகள் கையிலெடுத்து
     எளியேன் இருக்கும் இடந்தேடி,
கனியும் அன்பால் வந்துள்ளம்
     கனியச் செய்த கனவானே!
புனித ஞானி என்றுலகம்
     புகழும் ராஜ கோபாலா!
நனிஎம் பெருமான் அருளால்எந்
     நாளும் வாழ்க! வாழ்கவே!

வேறு

1033 எங்கும் மக்கள் இடரின்றி
     இன்பந் துய்க்கும் வழிகண்டு,
கங்குல் பகல்எக் கணமுந்தான்
     கடமை யாற்றும் அருளாள!
வங்க நாடு போற்றிநிதம்
     மகிழும் ராஜ கோபாலா!
சங்க பாணி திருவருளால்
     தழைத்து வாழ்க! வாழ்கவே!

1034 விண்ணமுதை யொத்த வியாசர் விருந்தளித்த
புண்ணியனே! வேதாந்த போதகனே! - தண்ணியநீள்
ஆழிசூம் இவ்வுலகில் ஆழியான் இன்னருளால்
வாழிநீ! ஐயா! மகிழ்ந்து.