Untitled Document
1052 | | அண்ணா மலைக்கழகம் ஆளும் துணைவேந்தன் தண்ணார் குணசீலன் சண்முகவேள் - விண்ணோர் போல் வாடா மகிழ்ச்சி மலர்சூடி வாழ்ந்திடுக, நீடாழி சூழும் நிலத்து. |
1053 | | கண்டும் கனியும் களியமுதும் மாறிஉருக் கொண்டும் கவியிற் குடிபுகுமோ? - தண்டமிழைப் போற்றுமுத்து சாமிப்புலவ ! நம் மன் சரிதைக்கு ஏற்றசுவை ஏற்றயவா றென்? |
1054 | | சீத மதிபுனைந்தோன் சிற்றம் பலக்கூத்தன் நாதன் உமைபங்கன் நல்லருளால் - கோதிலா நன்னடிகச் சிங்கமென நாடுபுகழ் ராமசிங்கம் மன்னுலகில் வாழ்க மகிழ்ந்து. |
1055 | | தந்தையொடு தாயும் தருமம் உளமகிழ வந்த தமிழரசி வாழி நிதம் வாழி கல்வி நன்கு கற்றுக் கற்றபடி நின்று செல்வி தமிழரசி சிரஞ்சீவி யாய் வாழி அமிர்த மொழிபேசி அறநெறியைப் பற்றித் தமிழரசி யென்றும் தழைத்துலகில் வாழி |
1056 | | பைந்தமிழ்க் காலெலாம் பரிமணித்திட - வந்தெழு பாஸ்கரன் வாழி வாழியே | |
|
|