பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு167

Untitled Document
நிறுவன வாழ்த்து (10)

147. பாரதி மண்டபம்

1057 தேவருமே இங்குவந்து செந்தமிழைக் கற்றினிய
பாவலராய் வாழமனம் பற்றுவரே - பூவுலகில்
வானுயரும் பாரதியார் மண்டபத்தை எட்டப்பன்
மாநகரில் கண்டு மகிழ்ந்து.

வேறு

1058 பாரதத்தாய் செய்தவப் பயனாய் வந்த
     பாவலன் சுப்பிரமணிய பாரதிக்குச்
சீருயரும் எட்டய புரத்திற் கண்ட
     திருக்கயிலை யனையமணி மண்டபத்தைப்
பேருவகை தருசர்வ ஜித்தில் கன்னி
     பிறந்தஇரு பானேழில் திறந்து வைத்தான்,
தாரணியில் வங்கவள நாட்டை யாளும்
     சக்ரவர்த்தி ராஜகோ பால மாலே.

148. தெய்வயோக சங்கம்

1059 ஆல நிழலில் சற்குருவாய்
     அமர்ந்தபெருமான் திருவருளால்
பால ராம புரமென்னும்
     பதியில் வைகும் இனியகுண
சீலர் அடியர் அறம்பேணும்
     தெய்வ யோக சங்கத்தார்
ஞால மீது தளராதெந்
     நாளும் வாழ்க வாழ்கவே!

149. சகுந்தலை நிலையம்

1060 நாமகளுக் காலயமாய் நற்கல்விச் சாலையுமாய்
மாமகுடஞ் சாவடியில் வாழியவே - நேமமிகு
நங்கை சகுந்தலையின் நன்னாமம் பெற்றுயர்ந்து
தங்கும் தனிநிலையம் தான்